Thiruvarur

News January 7, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 24-ஆம் தேதி முதல் பிப்.2-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் புத்தக கண்காட்சிக்கான இலச்சினை (Logo) மற்றும் கருப்பொருள் ஆகியவற்றை தயார் செய்து அனுப்புபவர்களுக்கு ரூ.15,000 பரிசு வழங்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதனை அனுப்ப ஜன.15-ஆம் தேதி (செவ்வாய்) கடைசி நாளாகும். மாவட்ட நிர்வாகம் தேர்தெடுக்கும் நபருக்கு பரிசு வழங்கப்படும்.

News January 6, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் மோசடிக்காரர்களுக்கு ஏதுவாக தேவையற்ற பல இணையதள பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கங்களின் போது, இணையதள பக்கங்களில் கேட்கப்படும் தங்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. SHAREIT

News January 6, 2025

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி படுகையான ‘மன்னார்குடி’

image

மன்னார்குடி நிலக்கரி படுகை ஆனது தென்னிந்தியாவிலேயே உள்ள மிகப்பெரிய படுகையாகும். இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி படுகைகளில் மன்னார்குடியும் ஒன்று. இப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட லிக்னைட் இருப்புகளின் அளவு 19.5 மி.டன்கள் ஆகும். மேலும் இங்கு நிலக்கரி எடுக்க அனுமதிக்க கூடாது என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்த உங்களின் கருத்து என்ன? COMMENT AND SHARE

News January 6, 2025

நீர் நிலைகள் பாதுகாவலர் விருது பெற அழைப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் நீர் நிலைகளைப் பாதுகாப்பவர்களுக்கு விருது வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், ரூ.1 லட்சம் பரிசுடன் நீர் நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு https://awards.tn.gov.in என்கிற இணையதளம் மூலம் வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். SHAREIT

News January 6, 2025

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

image

கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று வழங்கினார். இதில் மாவட்ட எஸ்பி உடனிருந்தார். SHAREIT

News January 6, 2025

டோக்கன் வழங்குவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம், ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள குடியிருப்புகளில் நியாயவிலைக் கடை மூலம் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக, பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருவதனை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ (ஜன.6) இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

News January 6, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு வளாகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று மனுக்களைப் பெற்று மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

News January 6, 2025

தொடர் திருட்டு: இருவர் குண்டர் சட்டத்தில் கைது

image

திருச்சி, பீமன் நகர் பகுதியைச் சேர்ந்த சஜாத் அலி, திருவையாறு புதுஅக்ரஹாரத்தைச் சேர்ந்த செல்வ கார்த்தி ஆகியோர் வலங்கைமான் காவல் சரக பகுதி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் திருட்டு வழிப்பறி வழக்குகள் உள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். 

News January 6, 2025

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் கலெக்டர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாரு ஸ்ரீ அவர்கள் 2025ஆம் ஆண்டுக்கான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியலினை இன்று வெளியிடுகிறார். இதில் வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

News January 5, 2025

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (05.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யவும் என காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!