India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை முன்னிட்டு, கடலோர தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.25) மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. SHARE NOW!
எடமேலையூர், வடுவூர் மற்றும் கோவில்வெண்ணி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வடுவூர், காளாச்சேரி, கோவில்வெண்ணி, மேலப்பூவனூர், நத்தம், மேலப்பூவனூர், நத்தம், சோனாப்பேட்டை, கொட்டையூர், அம்மாப்பேட்டை, சேர்மாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி -மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஜான்விக்டர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் எண்கண் பகுதியில் ரூ.2.27 கோடி மதிப்பிலான சுகாதார நிலையங்களை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அனைத்து மாவட்டங்களிலும் 18 வயது நிரம்பியவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வந்த நிலையில், தமிழகம் முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தார்.
பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், திருவாரூர் மாவட்டம் என்கண் பகுதியில் புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் சரகம், விடயபுரம் சேர்ந்த மோகன் மனைவி ஜெயா (45). விவசாயத் தொழிலாளரான இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயா ஆடுகளை ஜன்னல் கம்பியில் காட்டியுள்ளார். அப்போது அதில் எதிர்பாராத வகையில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (23.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டிடம் ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த பாழடைந்த கட்டிடத்தில் துர்நாற்றம் வீசிய நிலையில் அப்பகுதி மக்கள் திருவாரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் இன்று அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் இளம் வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்துள்ளார். இதையடுத்து இவர் கைது செய்யப்பட்ட நிலையில், சிறுமியிடம் குற்ற செயலில் ஈடுபட்டதால் மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, தற்போது ஆரோக்கியதாஸ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.