Thiruvarur

News November 27, 2024

திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டத்தை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News November 26, 2024

முத்துப்பேட்டை தொழிலாளர்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

image

அதிராம்பட்டினம் அருகே நடந்த விபத்தில் முத்துப்பேட்டை பகுதியிலிருந்து டெம்போ வாகனத்தில் சென்ற ஒரு பெண் பலியானார். 40 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் இன்று அங்கு சென்ற திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

News November 26, 2024

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கனமழை எதிரொலியால் திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவித்து ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மயிலாடுதுறை, கடலூர், நாகை, புதுவையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்வதால் விடுமுறை அறிவித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 26, 2024

பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு 

image

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை (நவ.27) நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலை., இளநிலை, முதுநிலை தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த தேர்வுக்கான மறுதேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இத்தகவலை கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் அறியும் வண்ணம் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடுமாறு பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

News November 26, 2024

உழவர் பாதுகாப்பு திட்ட நிதி உதவி விண்ணப்பிக்க அறிவிப்பு

image

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் உறுப்பினர்களாக பதிவு பெற்றவர்களின் வாரிசுகள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள், பட்டயப்படிப்புகள் படித்தால் கல்வி உதவித்தொகையும், மேலும், திருமண உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையும், பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News November 26, 2024

உழவர் பாதுகாப்பு திட்ட நிதி உதவி விண்ணப்பிக்க அறிவிப்பு

image

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் உறுப்பினர்களாக பதிவு பெற்றவர்களின் மகன், மகள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள், பட்டயப்படிப்புகள் படித்தால் கல்வி உதவித்தொகையும், மேலும், திருமண உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையும், பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்

News November 26, 2024

திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டத்தை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News November 25, 2024

வெள்ள மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்த திருவாரூர் எஸ்.பி

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பேரிடர் மீட்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (நவ.25) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

News November 25, 2024

மன்னார்குடியில் படகு சவாரி நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்

image

மன்னார்குடி நகர மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட படகு சவாரி ஹரித்ரா நதி தெப்பக்குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாக துவங்கப்பட உள்ளது. தினசரி மாலை 2:30 முதல் இரவு ஆறு மணி வரை படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 26.11.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணி அளவில் கானொலி காட்சி மூலம் துவக்கி வைக்க உள்ளார்.

News November 25, 2024

திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை ‘ரெட்’ அலெர்ட் எச்சரிக்கை

image

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதனால் நாளை (நவ.26) திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!