Thiruvarur

News November 28, 2024

உதயமார்த்தாண்டபுரத்தில் 1000 ஏக்கர் பயிர் பாதிப்பு

image

முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம், பள்ளியமேடு பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கிட்டத்தட்ட 65 நாட்கள் பயிரானது தற்போது தண்ணீரில் மூழ்கி அழுகத் தொடங்கி இருக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்திருக்கிறார்கள். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். உங்கள் பகுதியில் மழை சேதங்கள் உள்ளதா ?

News November 27, 2024

திருவாரூர் மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ வாபஸ்

image

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக இன்று (நவ.27) முதல் நாளை (நவ.28) காலை 8.30 மணி வரை திருவாரூர் மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கையை திரும்ப பெறுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News November 27, 2024

திருவாரூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

image

திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகிற நவம்பர் 30-ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதற்காக வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அன்றைய தினம் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News November 27, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 276.2 மில்லிமீட்டர் மழை பதிவு

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல்,நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4 மணி நிலவரப்படி மாவட்டத்தின் மொத்த சராசரியாக 272 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News November 27, 2024

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பாதிப்பு ஏற்படக்கூடியதாக கணக்கிடப்பட்டுள்ள 176 பகுதிகளில், 41 பகுதிகள் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளாகும், 67 பகுதியில் மிதமான பகுதிகளும், 67 பகுதிகல் குறைவாக பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும் இருந்து வருகிறது. பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைப்பதற்கு 225 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று திருவாரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 27, 2024

திருவாரூர் மாவட்டத்திற்கு மீண்டும் ‘ரெட் அலெர்ட்’

image

வங்கக்கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.28) காலை 8 மணி வரை திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் அதி தீவிர மழை (ரெட் அலெர்ட்) பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 27, 2024

சம்பா பயிர்களை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் பல்வேறு பகுதிகளில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News November 27, 2024

மழை முகாம்களில் அமைச்சர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகின்ற நிலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 16 ஆவது வார்டு எம்ஜிஆர் நகர் மக்கள் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

News November 27, 2024

திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை தேர்வுகள் ரத்து

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கூட்டுறவு மேலாண்மை பயிற்சி தேர்வு நடந்தது. இந்நிலையில் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இன்று (27.11.2024) நடைபெற இருந்த முதல் பருவத்திற்கான சிறப்பு தேர்வு மற்றும் துணைத் தேர்வு பருவ மழை காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்

News November 27, 2024

சிறுமியிடம் பாலியல் சீண்டல் – டெலிவரி பாய்  கைது

image

முத்துப்பேட்டையை சேர்ந்த இலக்கியதாஸ் (31), இவர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று ஆன்லைன் பொருட்களை சப்ளை செய்யும் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இன்று காலை வீட்டில் தனியாக இருந்த 6ஆம் வகுப்பு மாணவியிடம் இலக்கியதாஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!