India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளின் மறுத்தேதி குறித்த அறிவிப்பை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பாக, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, இலவச தேநீர், மதிய உணவுடன் கூடிய ஆண்களுக்கான சிசிடிவி கேமரா பயிற்சி 26.12.2024 தொடங்கி 13 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் 04366-299014, 9952577595 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் பயிர் விளைச்சல் போட்டியில் திருவாரூர் மாவட்டத்தினை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் குறைந்த பட்சம் 2 ஏக்கர் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகளாக இருக்க வேண்டும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் வேளாண் உதவி இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சில துணை மின் நிலையங்களில் இன்று (டிச.17) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் நகன்குடி, மூணாம்சேதி, வடங்கைமான், உம்பலச்சேரி, ஆதிகடை, கோவிந்தக்குடி, மருவத்தூர், ஆலங்குடி, மூலங்குடி, ஒடச்சேரி, பகாசலி, எம்.ஆர்.எம்., நவல்பூண்டி, ராஜபஞ்சவடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
திருவாரூா் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வரும் டிச.20 காலை 9 மணி முதல் 2 மணி வரை தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட நபா்களைதோ்ந்தெடுக்க உள்ளனா். 18 முதல்40 வயதுக்குட்பட்ட இளைஞர் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். SHARE IT
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 263 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2024-25 ஆம் நிதியாண்டின் கீழ் 10 நபர்களுக்கு இலவச கைப்பேசி ரூபாய் 1,61,990 மதிப்பிலும், ஏழு நபர்களுக்கு ரூபாய் 5,14,900 மதிப்பிலும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வழங்கினார்.
வலங்கைமான் பகுதியில் ஆட்டோவில் பான் மசாலா மற்றும் குட்கா கடத்தி வருவதாக காவல் ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆவூர் கடை வீதியில் இன்று காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ ஒன்றில் ரூ.60,000 மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா கடத்தி வந்த தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட கூடிய மாவட்டங்களில் திருவாரூர் 2-ஆம் இடத்தில் உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்கள், குறையும் நிலத்தடி நீர் மட்டம் ஆகிய காரணங்களால் வரும்காலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளம், வறட்சி, கடும் வெப்பம், அரிசி உற்பத்தி பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக டிச.12,13 ஆகிய இரண்டு நாள் விடுமுறை மற்றும் சனி ஞாயிறு விடுமுறை ஆகிய நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. விடுமுறை நாட்களில் விடுபட்ட தேர்வுகள் பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின் படி பின்னொரு நாளில் நடைபெறும் என தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.