Thiruvarur

News December 21, 2024

திருவாரூரில் முகநூல் மூலமாக ரூ.26 லட்சம் மோசடி

image

திருவாரூர் பகுதியை சேர்ந்த ஹேமலதாவை முகநூலில் (பேஸ்புக்) தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பரிசுப் பொருட்கள் அனுப்பி வைப்பதாக, ஆசை வார்த்தைகள் கூறி ஹேமலதாவிடம் இருந்து ரூ.26.23 லட்சத்தை பெற்றுள்ளார். இதையடுத்து அந்த நபரிடம் இருந்து எந்த தகவலும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹேமலதா, மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரிடம் நேற்று அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 21, 2024

திருவாரூர்: நலவாரியத்தில் பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்து கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, மரணம், விபத்து, ஊனம், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை பெற்றிட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் www.tnuwwb.tn.gov.in என்ற இணைய தளம்  வழியாக பதிவு செய்யுமாறு திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ அழைப்பு விடுத்துள்ளார்.

News December 21, 2024

திருவாரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் தேர்வுகள்

image

திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக டிச.12,13 இரண்டு நாள் விடுமுறை விடப்பட்டதால் கடந்தா 12 -ஆம் தேதி நடைபெற இருந்த 6 முதல்10 ஆம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், 11,12 ஆம் வகுப்புகளுக்கான கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல் ,கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகிய தேர்வுகள் இன்று நடைபெறுகின்றன.

News December 21, 2024

வைரஸ் தொற்றுகளில் இருந்து நெற்பயிரை காக்க அறிவுரை

image

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் நெல்லில் துத்தநாக பற்றாக்குறை தென்படும். வைரஸ் தொற்றுகளில் இருந்து நெற்பயிர்களை காக்க இந்த துத்தநாக ஊட்டச்சத்து மிகவும் அவசியம். இப்பற்றாகுறையை போக்க 0.5 சதம் துத்தநாக சல்பேட்டுன் 1.0 சதம் யூரியா கரைசலை இலைகளின் மீது தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யவும்!

News December 20, 2024

மத்திய அமைச்சரை சந்தித்த நாகை எம்பி

image

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேற்று (டிச.19) அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் சேவை மிக குறைந்த அளவிலேயே செயல்படுவதாகவும், எனவே நாகை நாடாளுமன்ற தொகுதியில் அதிகளவில் ரயில் வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி கோரிக்கை மனுவினை வழங்கினார். 

News December 20, 2024

திருவாரூரில் ரூ.21 லட்சத்துக்கு வாகனங்கள் ஏலம்

image

திருவாரூர் ஆயுதப்படை வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன ஏலம் நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை பகுதிகளிலிருந்தும் மக்கள் பங்கேற்றனர். ஏலத்தில் 6 நான்கு சக்கர வாகனங்களும், 147 இரு சக்கர வாகனங்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதில், 5 நான்கு சக்கர வாகனங்கள், 140 இரு சக்கர வாகனங்கள் பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்டது. ரூ.21,90,810 ஏலத்தொகையாக பெறப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் வரவு வைக்கப்பட்டது.

News December 20, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 229.80 மில்லி மீட்டர் மழை

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி, கோட்டூர், ராயநல்லூர், விக்கிரபாண்டியம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்ற நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 229.80 மில்லி மீட்டர் மழை பதிவு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

News December 19, 2024

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் டிச.27ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். உரிய அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம், தகுதியான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 19, 2024

திருவாரூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

திருவாரூரில் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் திருவாரூர் விளமலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை (டிச.20) நடைபெற உள்ளது. காலை 9-2 மணி வரை நடைபெறும் முகாமில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். ஆதார் மற்றும் கல்விச் சான்றிதழ் உடன் <>www.tnprivatejobs.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News December 19, 2024

கோட்டூர்: இடிந்து விழும் நிலையில் உள்ள மதகு; தற்காலிக சீரமைப்பு

image

கோட்டூர் அருகே கோரையாற்றில் இருந்து பொண்ணுக்குண்டான் ஆற்றின் பிரிவு மதகு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1920-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது ஆற்றில் ஏற்பட்டுள்ள அதீத நீரோட்டம் காரணமாக மதகின் பெரும் பகுதி விரிசல் விட்டு சேதமைடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பொதுப்பணித்துறைக்கு தகவல் அளிக்கவே தற்காலிகமாக மணல் மூட்டைகளால் சீரமைக்கப்பட்டது.

error: Content is protected !!