India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம், ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள குடியிருப்புகளில் நியாயவிலைக் கடை மூலம் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக, பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருவதனை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ (ஜன.6) இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு வளாகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று மனுக்களைப் பெற்று மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
திருச்சி, பீமன் நகர் பகுதியைச் சேர்ந்த சஜாத் அலி, திருவையாறு புதுஅக்ரஹாரத்தைச் சேர்ந்த செல்வ கார்த்தி ஆகியோர் வலங்கைமான் காவல் சரக பகுதி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் திருட்டு வழிப்பறி வழக்குகள் உள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாரு ஸ்ரீ அவர்கள் 2025ஆம் ஆண்டுக்கான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியலினை இன்று வெளியிடுகிறார். இதில் வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (05.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யவும் என காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் நீர் நிலைகளைப் பாதுகாப்பவர்களுக்கு விருது வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், ரூ.1 லட்சம் பரிசுடன் நீர் நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு https://awards.tn.gov.in என்கிற இணையதளம் மூலம் வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு புவியியல் துறை 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டின் மக்கள்தொகை குறைவான மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட மக்கள்தொகை 13.4 லட்சமாக குறைந்து, 11 ஆம் இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள திருவாரூர் மக்கள், பொருளாதார மேம்பாட்டிற்காக பெரும் நகரத்தை நோக்கி படையெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. SHAREIT
நீடாமங்கலம், சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்தி என்கிற ராஜா மற்றும் ராஜேந்திரன். இவர்கள் இருவருக்குமிடையே இடப்பிரச்சனை காரணமாக 2018 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில் ராஜா என்பவர் இரும்புக் கம்பியால் ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதுகுறித்த வழக்கை விசாரித்த திருவாரூர் முதன்மை நீதிமன்றம், கார்த்தி என்கிற ராஜாவிற்கு 4.1/2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்தது.
திருவாரூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடந்த பிப்ரவரி மாதம், காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். பணிகள் சரிவர முடிக்கப்படாத காரணத்தால் இந்த சாலையில் கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மேலும் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதால் அப்பகுதி மக்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். SHARE NOW
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய வெல்டர், பிளம்பர், பிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதியும், 3 வருட பணி அனுபவத்துடன் கூடிய 44 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.