Thiruvarur

News April 12, 2025

மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது 

image

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியின் பெற்றோர் வெளியூருக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் சரவணன் (47)  என்பவர் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பெற்றோர் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

News April 11, 2025

திருவாரூர்: வாலிபால் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு

image

திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஏப்.12) மதியம் 2 மணியளவில் வாலிபால் விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு திருவாரூர் அருகில் உள்ள அம்மையப்பன் குளோபல் கலைக் கல்லூரியில் இலவச சேர்க்கை, உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாலிபால் விளையாடும் உங்க நண்பருக்கு இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தும் செய்யணுமா?

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News April 11, 2025

திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை வேலைநாள்

image

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டது. அதனைஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

News April 10, 2025

திருவாரூர்: தெரிந்து வைத்திருக்க வேண்டிய உதவி எண்கள் (பாகம்-2)

image

திருவாரூர் மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அரசு உதவி எண்கள் (பாகம்-2). மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04366 – 221003, மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, விபத்து அவசர வாகன உதவி – 102, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091, பேரிடர் கால உதவி – 1077, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04366-220510. இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <>அதிகாரப்பூர்வ இணையத்தில் <<>>ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து, உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

News April 10, 2025

கோட்டூர் அருகே மின்னல் தாக்கியதில் வீடு எரிந்து சேதம்

image

திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் நேற்று இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதில் சேந்தமங்கலம் மேலத்தெரு ஊராட்சியில் முருகானந்தம் என்பவருடைய கூரை வீட்டில் மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. மேலும் வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளியான பிரகதீஷ் என்பவருக்கும் முழங்கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 9, 2025

திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு சனிக்கிழமை வேலைநாள்

image

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26.11.2024, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

News April 9, 2025

திருவாரூர்: பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு

image

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள SDAT மைதானத்தில் வரும் ஏப்.20 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இத்தேர்வில் 30.08.2013-க்கு முன் பிறந்த வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 93450 39690, 86103 42089 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!

News April 9, 2025

திருவாரூர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களை தற்காலிகமாக மூட அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாளை (ஏப்.10) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!