Thiruvarur

News January 16, 2025

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் கவனத்திற்கு 

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மட்டையாளர் (BATSMAN) மற்றும் விக்கெட் கீப்பர்களுக்கான (WICKET-KEEPER) தேர்வு வரும் சனிக்கிழமை (ஜன.18) திருவாரூர் திருவிக அரசுக் கலை கல்லூரியில் காலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13-21 வயதுக்குட்பட்ட பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட்கீப்பர்கள் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வருபவர்கள் கட்டாயம் வொயிட்ஸ் (Whites) அணிந்திருக்க வேண்டும். 

News January 16, 2025

திருவாரூர்: ஒரே நாளில் ரூ.6.81 கோடிக்கு மது விற்பனை

image

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் (மதுபான) கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்கள் தைபொங்கல் தினத்தன்று மது பாட்டில்களை வாங்கி குவித்தனர். இதன் காரணமாக கடந்த ஜன.14-ஆம் தேதி மட்டும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 100 டாஸ்மாக் கடைகளில் ரூ.6.81 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.81 லட்சம் அதிகமாகும்.

News January 15, 2025

திருவாரூர் அருகே முதியவர் மீது கொலை முயற்சி

image

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் இருதயசாமி. இவர் பவித்ரமாணிக்கம் கடை வீதியில் நின்று கொண்டிருந்த போது, முன்விரோதம் காரணமாக காட்டூர் அருகே அகரத் திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சூரியதாஸ் என்கிற இளைஞர் அறிவாளால் வெட்ட வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சூர்யதாஸை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

News January 14, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் பொங்கல் வாழ்த்து

image

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், தங்களது இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். அனைவருக்கும் என் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். 

News January 13, 2025

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப ரயில்கள் நேரம்

image

ஜனவரி 16 வியாழக்கிழமை அன்று வண்டி எண் 06070 திருநெல்வேலி சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலி மாலை 6: 45 மணிக்கு புறப்பட்டு அறந்தாங்கி 11:8, பேராவூரணி 11:28, பட்டுக்கோட்டை 11:50, அதிராம்பட்டினம் 11:54, முத்துப்பேட்டை நள்ளிரவு 12:6, திருத்துறைப்பூண்டி 12:28, திருவாரூர் 1.50 மணிக்கு வந்து அடையும் என திருவாரூர் ரயில் பயணிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

News January 13, 2025

அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்: கலெக்டர்

image

திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை முறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு பெல்ட் டைப் ரூ.2,500, டயர் டைப் ரூ.1,850 என வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் விவசாயிகள் தாசில்தார் அல்லது வேளாண் துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

திருவாருரில் ஐஜி அதிரடி உத்தரவு

image

திருவாருர் எஸ்.பி அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோசி நிர்மல் குமார், திருவாருர் மற்றும் நாகை மாவட்ட காவல் அதிகாரிகளுடன் இன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இதில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள கொலை, வழிப்பறி, திருட்டு வழக்குகள், ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, விரைந்து வழக்குகளை முடிக்க உத்தரவிட்டார். SHARE IT !

News January 12, 2025

திருவாரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (ஜன.12) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!

News January 12, 2025

திருவாரூர்: சீமான் மீது குவியும் புகார்கள்

image

வடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பெரியார் குறித்து அவதூறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை சீமான் தெரிவித்தார். இதனால் கொதித்தெழுந்த திராவிட இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் சீமான் மீது காவல் நிலையங்களில் புகாரளித்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் சீமான் மீது 30-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News January 12, 2025

திருவாரூர்: சகோதரனை வெட்டிக் கொலை செய்த அண்ணன்

image

திருவாரூர் அருகே தியானபுரம் காலனி தெரு பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ். இவரது உடன்பிறந்த சகோதரர் ஜெயராமன். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (ஜன.11) இரவு இருவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த ஜெயராஜ், தனது தம்பி ஜெயராமனை அறிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.  ஜெயராஜை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!