India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் விஜயபுரம் பழைய நாகை சாலையில், தங்கமுத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தது அறநிலையத்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உதவியுடன் அங்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த இடத்தினை அளவீடு செய்து மீட்டனர். அதன் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். SHARE NOW!
திருவாரூரில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த மேலும் தகவல்களுக்கு www.skilltraining.tn.gov.in என்கிற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். SHARE NOW !
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் திருவாரூர் மாவட்டம் சார்பாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு பாராட்டு விழாவில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசும் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (24.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாளை (ஜன.25) தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மன்னார்குடிக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் பணியில் திருவாரூர் மாவட்ட தேமுதிகவினர் ஈடுபட்டுள்ளனர்.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன், ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் கிராமப்புற விவசாயத் திறனை மேம்படுத்துதல் திட்டத்தில் ட்ரோன் பைலட் பயிற்சி மற்றும் ட்ரோன் பராமரிப்பு பயிற்சி நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு பயன்பெற நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும் விபரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம். SHARE NOW!
திருவாரூர் மாவட்டத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது. இன்று (ஜன.24) தொடங்கி பிப்ரவரி 3 வரை புத்தக திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. மாலை கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது என மாவட்டத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 17.01.2025 விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதை ஈடு செய்யும் வகையில் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் (ஜன.26) குடியரசு தினம் அன்று சாதிய, பாலின பாகுபாடின்றியும், எவ்வித புகார்களுமின்றியும், தனி அலுவலர் பொது மக்களுடன் இணக்கமாக செயல்பட்டு கிராம சபை கூட்டத்தினை நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் கலந்துகொண்டு ஒன்றிய குழுவிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஈரப்பதத்தை 17%லிருந்து உயர்த்தி 22% வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.