Thiruvarur

News February 4, 2025

திருவாரூர் மாவட்டத்தில் செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் கணிணி அறிவியல் பாடங்களுக்கான 2024/25 ஆண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். SHARE NOW !

News February 4, 2025

திருவாரூரில் கல்வி கடன் திட்டம்

image

திருவாரூர், தமிழ்நாடு சிறுபான்மையர் பொருளாதார மேம்பாட்டு கழகமான டாம்கோ கல்வி கடன் திட்டம் அறிவித்துள்ளது. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி, பட்டப்படிப்புகளுக்கு கல்வி கடனுதவி பெற உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் போன்றவற்றில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

News February 4, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை

image

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், திருவாரூர், விளாமல், விஜயபுரம், முகுந்தனூர், பெருமானையூர், மடபுரம், சேந்தமங்கலம், நெய்விளக்குத்தோப்பு, கொரடாச்சேரி, முகந்தனூர், வெட்டாறு பாலம், அடியக்கமங்கலம், ஆலிவலம், ஓடச்சேரி, அந்தகுடி, திருத்துறைப்பூண்டி, கடிமேடு ஆகிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News February 3, 2025

செல்லூர்: மாநில அளவிலான செஸ் போட்டி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம், செல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வரும் பிப்.9 (ஞாயிறு) மாநில அளவில் சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது. பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ள makemychess.com என்ற இணையதளம் வாயிலாக நுழைவு கட்டணம் ரூ.300-ஐ செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9944570585, 9865466683 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். செஸ் விளையாடும் உங்களது நண்பகர்ளுக்கு இதனை பகிரவும்

News February 3, 2025

திருவாரூர் பாஜக நகர தலைவர் கைது

image

திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட பாஜக நகரத் தலைவர் மற்றும் பாஜகவினர் செல்வதை தடுக்கும் வகையில், பாஜக திருவாரூர் நகர தலைவர் கணேசனை இன்று காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News February 3, 2025

ரூ.2 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வழங்கிய ஆசிரியர்

image

திருவாரூர் புத்தகத் திருவிழாவில் வீட்டு நூலகம் அமைக்க முத்துப்பேட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வசிதம்பரம் 50 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் மதிப்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார். ஆசிரியர் செல்வசிதம்பரத்தை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ,  சி.இ.ஓ.ஆர்.சௌந்திரராஜன், கோட்டாட்சியர் சௌம்யா உள்ளிட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் பாராட்டினர். 

News February 3, 2025

வடுவூர்: சொத்து பிரச்சனையில் அரிவாள் வெட்டு

image

வடுவூா் வடபாதி பகுதியை சேர்ந்தவர்கள் பிச்சையன் (70), கோபால் (66). சகோதரா்களான இவா்களிடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. இந்தநிலையில், நேற்று பிச்சையனின் மகன் ரமேஷ் பிரபு (37), வடுவூா் வடபாதியில் உள்ள தனது தோட்டத்தில் இருந்த போது, அங்கு வந்த கோபாலின் மைத்துநரும், தமாகா பிரமுகருமான சங்கா் (48), ரமேஷ் பிரபுவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் கோபால், சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

News February 2, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (பிப்.4) பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் திருவாரூர் மடப்புரம், சேந்தமங்கலம், விளமல், விஜயபுரம், கொரடாச்சேரி, அடியக்கமங்கலம், அலிவலம், எடையூர், ஓடாசேரி, குமாரமங்கலம், பாண்டி, கட்டிமேடு, பெருகவாழ்ந்தான், சித்தமல்லி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2025

நீடாமங்கலத்தில் இருந்து 2,000 டன் அரிசி அனுப்பி வைப்பு

image

வலங்கைமான் வட்டத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,000 டன் சன்னரக நெல் மற்றும் 1,000 டன் பொதுரக நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் வடசென்னைக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

News February 1, 2025

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்: தல வரலாறு (பாகம் 4)

image

பொதுவாக ராஜகோபுரத்தில், எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில், கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை. ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வித்தியாசமான அமைப்பில் கோபுரத்தை காண்பது அரிது. திருவாரூர் தேரழகு என்பதுபோல, “மன்னார்குடி மதிலழகு’ என்பது சொல் வழக்காக உள்ளது.

error: Content is protected !!