India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டம் அகஸ்தியன்பள்ளியில் இருந்து வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குருப்-2 தேர்வு நாளை (செப்.14) தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 11,994 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். 42 முதன்மை கண்காணிப்பாளர்கள், 13 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படைகள், 42 ஆய்வு அலுவலர்கள், 45 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ள நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஆட்சியா் சாருஸ்ரீ தலைமை வகித்தார். திருவாரூரில் உள்ள 28 தோ்வு மையங்களில் 42 தோ்வுக் கூடங்களில் நாளை காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. 11,994 போ் தோ்வெழுத உள்ளனா் என்று தெரிவித்தார்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் ஸ்வீட் கடை மோகன் இவருடைய மகன் அருள் பிரகாஷ் கடந்த மாதம் இட தகராறில் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நான்காவது நபராக இன்று காலை ராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு நிலவரம் (மிமீ) நேற்று (செப்.11) காலை 6 மணி முதல் இன்று (செப்.12) காலை 6 மணிவரை நிலவரப்படி திருவாரூர்-13.0, நன்னிலம் – 0.0, குடவாசல்-5.2, வலங்கைமான்-5.0, மன்னார்குடி -29.0, நீடாமங்கலம்-21.8, பாண்டவையாறு-12.4, திருத்துறைப்பூண்டி- 11.4, முத்துப்பேட்டை-17.4, மொத்தம் – 115.2, சராசரி – 12.8. அதிகபட்சமாக மன்னார்குடியில் 29 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட 38.ஆலங்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ கலந்து கொண்டு 275 பயனாளிகளுக்கு ரூ.98,86,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நன்னிலம் பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகளான கலைஞரின் கனவு இல்லம் திட்டம், புதிய அங்கன்வாடி மைய கட்டுமானம், புதிய சாலைகள் அமைப்பு உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய மக்கள் அரசு தமிழக அரசு சார்பில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க கடைசி நாள் 09.09.24 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை வரும் 23.09.24 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.hajcommittee.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செப்.14 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டாரங்களிலும் ஒவ்வொரு இடத்தில் நடத்தப்பட உள்ளது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அலுவலர்களிடம் அளித்து பயன்பெறலாம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார
தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் முதலாமாண்டு தொழிற்கல்வி பயிலும் தங்களின் சிறார்களுக்கு “www.ksb.gov.in” என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக்குறிப்பின்படி, இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
Sorry, no posts matched your criteria.