Thiruvarur

News September 15, 2024

திருவாரூரில் ரூ.19 கோடிக்கு சமரச தீர்வு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ 19 கோடியே 23 லட்சம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டதாக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1963 வழக்குகள் கோப்பிற்கு எடுக்கப்பட்டு அதில் 643 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

News September 14, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 2781 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 11,994 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், இன்று நடைபெற்ற தேர்வில் 9213 பேர் மட்டுமே எழுதினர். 2781 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News September 14, 2024

குரூப் 2 தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டத்தில் குருப்-2 தேர்வு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உட்பட 28 தேர்வு மையங்களில் இன்று (14.09.2024) நடைபெற்று வருகிறது. இத்தேர்வினை எழுத 11,994 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இன்றைய தினம் நடைபெற்ற தேர்வில் 9,213 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மையங்களில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று ஆய்வு மேற்கொண்டார்.

News September 14, 2024

திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய மட்டன் விலை

image

திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் இன்று (செப்.14) தேதி மட்டன் தனிக்கறி ஒரு கிலோ ரூ.750 முதல் ரூ.900 வரையிலும், எழும்பு கறி ரூ.500 முதல் ரூ.700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முத்துப்பேட்டையில் மட்டன் தனி கறி ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது. எறும்பு கறி ரூ.500 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

News September 14, 2024

நன்னிலம் அருகே கடனை திருப்பி கொடுக்க முடியாததால் தற்கொலை

image

நன்னிலம் அருகே ஆலங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கூலி தொழி–லாளி. மணிகண்டன் மகளிர் குழுவில் மனைவியின் பெயரில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் மணிகண்டன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 14, 2024

முத்துப்பேட்டையில் 3,000 போலீசார் குவிப்பு

image

முத்துப்பேட்டையில் இன்று மாலை நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் முன்னிட்டு திருச்சி ஐ.ஜி கார்த்திகேயன் தலைமையில் திருச்சி டி.ஐ.ஜி, தஞ்சை டி.ஐ.ஜி, திருவாரூர், தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த எஸ்பி-கள், 12 ஏடிஎஸ்பி, 41 டிஎஸ்பிகள், உட்பட 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

News September 14, 2024

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தீர்வு காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 20.09.2024, காலை 10.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

சென்னை-திருத்துறைப்பூண்டி ரயில் சேவை

image

சென்னை டூ திருத்துறைப்பூண்டி வண்டி எண் 06103/06104 தாம்பரம் இருந்து ராமநாதபுரம் தற்பொழுது வாரம் ஒரு முறை இயக்கப்படும் ரயில் வரும் 19/09/2024 வாரம் மும்முறை இயக்கப்பட]உள்ளது. அதன்படி திங்கள், வியாழன் மற்றும் சனி தாம்பரத்திலிருந்து மறுமார்க்கமாக ராமநாதபுரத்திலிருந்து செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு வழியாக விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை திருத்துறைப்பூண்டி வரை இயக்கப்படுகிறது.

News September 13, 2024

திருவாரூரில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

image

நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டத்தில் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 16.09.2024 மற்றும் 26.09.2024 ஆகிய நாட்களில் திருவாரூர் – வேலுடையார் அரசு உதவிப்பெறும் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. எதிர்வரும் 19.09.2024 மற்றும் 27.09.2024 ஆகிய நாட்களில் மன்னார்குடி ஃபின்லே மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் நடைபெறவுள்ளது. 

News September 13, 2024

திருத்துறைப்பூண்டி வழியாக ரயில் இயக்க கோரிக்கை

image

நாகை மாவட்டம் அகஸ்தியன்பள்ளியில் இருந்து வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.