India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <
திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள், கடத்துபவர்கள், அச்செயலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, மது, புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4,506 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி கருண் கரட் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.9) இரவு 10 மணி முதல் நாளை (ஆக.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விபரங்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅ குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகனின் சிலையை வடித்த சிற்பியின் இரு கண்களை, முத்தரச சோழன் தானமாக பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு முருகன் கண்களை வழங்கியதால் எண்கண் முருகன் என பெயர் வந்துள்ளது. இதனால் இங்கு பிராத்தித்தால் இழந்தவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதை Share பண்ணுங்க…
குடவாசலில் இருந்து வலங்கைமான் வழியாக பாபநாசம் செல்லும் அரசு பேருந்து அகர ஓகை அருகே சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் மின்கம்பம் மூன்று துண்டுகளாக உடைந்து பேருந்தின் மீது விழுந்ததில், பேருந்தின் முன் பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த பெரும் விபத்தில் ஓட்டுனர் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து பல்வேறு பகுதிகள் வழியாக புதிய பேருந்து இயக்கம் செயல்முறைப்படுத்தப்பட்டு உள்ளன. திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பேருந்து, கோட்டூர், மன்னார்குடி, வடுவூர் உள்ளிட்ட பல ஊர்களின் வழியாக இயக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<
திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 9) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமானது மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறவுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.08) இரவு 10 மணி முதல் நாளை (ஆக.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விபரங்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.