India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!
டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ம் தேதிக்குள்<
வலங்கைமான் தாலுக்கா ஆலங்குடி அருகே உள்ள பூனாயிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இன்று காலை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் ரவா கிச்சடி சாப்பிட்டபோது அதில் பல்லி கிடந்தது தெரியாமல் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், 8 மாணவர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 3-ம் தேதி திருவாரூர் வருகிறார். தொடர்ந்து மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும், சுதந்திரதின கிராம சபைக் கூட்டங்கள் வரும் 15-ந் தேதி நடக்கிறது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் (12.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு ஊராட்சியின் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பையும் முழுமையாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் <
பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.