Thiruvarur

News October 10, 2024

திருவாரூர் அருகே பெண் வெட்டி கொலை

image

கூத்தாநல்லூர் தாலுகா 100 மேல பருத்தியூரை் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணகிரசி (48). இவர், நேற்று மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும், கொலையாளிகள் அவர் அணிந்துருந்த 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News October 10, 2024

திருவாரூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 33 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமன மூலம் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கடைசி தேதி 7.11.2024 மாலை 5:45 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி, வயது போன்றவற்றை https://www.drbtvr.in இணையதளத்தில் காணலாம்.

News October 10, 2024

மானியத்தில் தொழில் தொடங்க ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் தொழில் முனைவராக விருப்பமுள்ளவர்கள், ஏழ்மையான ஆதரவற்ற கைம்பெண்கள் கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 40 கோழி குஞ்சுகள் வாங்க 50% மானியத்தில் ரூபாய் 1600 வழங்கப்படும். மேலும் 30% ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர பெண்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

எஸ்பி அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் இருந்து துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர். நிலம் குற்ற வழக்குகள் கையாள்வது குறித்து எஸ் பி அறிவுரைகளை வழங்கினார்.

News October 9, 2024

திருவாரூரில் ரோந்து காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (09.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி 37 மனுக்களை அளித்தனர். அதனை நேரடியாக பெற்று அவர்களது குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பி உத்தரவிட்டார்.

News October 9, 2024

திருவாரூரில் விடிய விடிய பெய்த கனமழை

image

திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நேற்று நள்ளிரவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாருர் நகரம், வடகண்டம், திருக்கண்ணமங்கை, பவித்ரமாணிக்கம், வண்டாம்பாளை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், குளங்கள் ஏரிகள் நிரம்பி வழிகிறது.

News October 9, 2024

திருவாரூர் மத்திய பல்கலை -கழகத்தில் வேலை வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கிளர்க், உதவியாளர் உள்ளிட்ட 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cutn.ac.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 8, 2024

இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (08.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100-ஐ அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் நேர்காணல் முகாம் 10.10.2024 அன்று பின்னத்தூர் ஊராட்சியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி மழையின் காரணமாக சங்கேந்தி அன்பு திருமண மண்டபத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.