Thiruvarur

News March 21, 2025

திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் மார்ச்.23 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகே ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாதா ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

News March 21, 2025

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி உண்டு

image

திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ( பொ) செளந்தரராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (மார்ச்.22) சனிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாளாகும். தமிழ்நாடு அரசு புதிய நாட்காட்டியின்படி முழு ஆண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக சனிக்கிழமை முழு வேலைநாள் என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் SHARE பண்ணுங்க..

News March 20, 2025

ஆலங்குடி குருபரிகார கோயிலில் சிறப்பு வழிபாடு

image

நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகாரகோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கலங்காமற் காத்தவிநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன்,மூலவர் குருபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். SHARE NOW….. 

News March 20, 2025

திருவாரூர்: கொலை முயற்சி வழக்கில் 5 ஆண்டுகள் சிறை

image

திருவாரூர் அருகே புதுபத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நடராஜன் (57) என்பவர்  கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வழக்கின் விசாரணை திருவாரூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000/- அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

News March 20, 2025

மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் நேற்று முதல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை குடவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் காலை உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையல் பணியாளர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.

News March 20, 2025

அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 20, 2025

திருவாரூரில் 400 ஆண்டுகால மூலிகை ஓவியங்கள்

image

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தில் மராட்டிய மன்னர்கள் காலத்தில், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் முழுவதும் மூலிகைகளை மட்டும் பயன்படுத்தி வரையப்பட்ட 96 ஓவியங்கள் உள்ளன. அவை, சிவலீலைகளை விளக்கும் விதமாகவும், திருவாரூர் பெருமைகள் சொல்லும் வகையிலும் வரையப்பட்டன. பக்தி மட்டுமல்லாது அவை பண்டைய வரலாற்றுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. இது தெரியாத உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 19, 2025

திருவாரூரில் இரத்ததான முகாம்: எம்.எல்.ஏ பங்கேற்பு

image

திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் 1000 இளைஞர்கள் மாணவர்கள் பங்கேற்கும் இரத்ததான முகாம் திருவாரூர் மருத்துவமனையில் வரும் 23.03.2025 (ஞாயிறு) காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமை திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார். நாகை எம்பி வை.செல்வராஜ், மருத்துவ கல்லூரி முதல்வர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொள்கின்றனர்.

News March 19, 2025

மன்னார்குடியில் இலவச டிஎன்பிசி பயிற்சி வகுப்பு

image

மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் வரும் ஜூலை.13-ஆம் தேதி நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மன்னார்குடி வடசேரி சாலையில் அமைந்துள்ள ஆண்டாள் வெங்கடேசன் அரங்கத்தில் நாளை (மார்ச்.20) மாலை 4 மணியளவில் நடைபெறும் அறிமுக வகுப்பில் ஆர்வமுள்ளோர் கலந்து கொள்ளும்மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News March 19, 2025

எள் பயிர் காப்பீடு திட்ட தேதியை நீட்டிக்க கோரிக்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மன்னார்குடி கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் எள் பயிர்கள் பெரிது பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை மாவட்ட ஆட்சியர் நீட்டித்து தர வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் தர்மசுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!