Thiruvarur

News May 9, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

ஆசிரியர்கள் பணியிட நிரவல் செய்வதை கைவிட வேண்டும்

image

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் சண்முகநாதன் முத்துப்பேட்டை செய்தியாளர்களிடம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை மாநில அளவில் பணியிட நிரவல் செய்வதை தமிழக அரசு கைவிடல் வேண்டும். தலைமையாசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மட்டுமே இடமாற்றங்கள் அளித்திட வேண்டும். பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியினை கட்டாயமாக்கிட கூடாது என்றார்.

News May 8, 2024

திருவாரூர்: எஸ்.பி. தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த 20 மனுதாரர்களிடம் நேரடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார்.

News May 8, 2024

மன்னார்குடி: 18, 19 தேதிகளில் கல்வி கண்காட்சி

image

மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, அன்னை தெரசா கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி மே.18, 19 ஆகிய தேதிகளில் தேசியப் பள்ளியில் நடைபெற உள்ளது. சென்னை, கோவையை சேர்ந்த 40 கல்லூரிகள், 10 பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. வங்கி கடன் வசதிகளுக்கு வழிகாட்டுதல் தரப்படும் மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

எக்ஸ்பிரஸ் நின்று செல்ல கோரிக்கை

image

மன்னார்குடியில் இருந்து ஜோத்பூர் வரை செல்லும் பகத் கி கோதி எக்ஸ்பிரஸ் ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீடாமங்கலம் வழி செல்லும் அனைத்து ரயில்களும் நீடாமங்கலத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. ஆனால் இந்த ரயில் மட்டுமே நிற்பதில்லை. ஆனால் சர்வீஸ்-க்காக திருச்சி செல்லும் போது இரு வழியிலும் இன்ஜின் மாற்றுவதற்கு அரைமணி நேரம் நீடாமங்கலத்தில் நிற்கிறது.

News May 8, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 8, 2024

திருவாரூர் தெப்ப திருவிழா அழைப்பிதழ் ரெடி

image

திருவாரூர் அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா கமலாலயம் தெப்ப குளத்தில் வரும் 22.05.24 (புதன்கிழமை) 23.05.24 (வியாழக்கிழமை) 24.05.24 (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு. முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் அழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.

News May 8, 2024

மது விற்றவர் கைது – போலீசார் அதிரடி

image

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமலாபுரம் அரசு மதுபான கடை அருகில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தபாண்டியன் நகரை சேர்ந்த அமர்நாத்(45) என்பவரை கைது செய்தனர்.  மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

News May 7, 2024

திருவாரூர்: மணல் திருடிய ஆறு பேர் கைது

image

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக்கில் மணல் திருடிய கூத்தாநல்லூரை சேர்ந்த முரளிதாஸ், சரண்ராஜ், செங்குட்டுவன், தினேஷ் குமார் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!