India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மன்னார்குடியில் 13 செ.மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 6 செ.மீட்டரும், நீடாமங்கலம், முத்துப்பேட்டை, குடைவாசல் ஆகிய பகுதிகள் 5 செ.மீட்டரும், வலங்கைமானில் 4 செ.மீட்டரும், திருவாரூர், திருவாரூர் AWS ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் நேற்று(மே 15) திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் (பொறுப்பு), மாவட்ட வருவாய் அலுவலருமான சண்முகநாதன் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசினார். தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலா்களும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 16) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நன்னிலம் தாலுகா பணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கோவிந்தசாமி என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பி, அவரிடமிருந்து OTP பெற்று வங்கி கணக்கிலிருந்து ரூ.18,561ஐ திருடியுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையில் கொடுத்த புகாரின்பேரில் ஜார்கண்ட் மாநில வங்கியிலிருந்து பணத்தை திரும்ப பெற்று போலீசார் ஒப்படைத்தனர். பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடி சோழா மஹாலில் வரும் 17.05.24 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவரும், தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
குடவாசல் ஓகை பாலம் அருகே கடந்த ந்தேதி முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி தலைவர் மதுவை பைக்கில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தநிலையில் இன்று அம்மாப்பேட்டை பைபா சரவணன், காட்டூர் ஜெகதீசன் ஆகிய இருவரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டுப் படகுகளும் மே 22-ஆம் தேதி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலா்களால் ஆய்வு செய்யப்படும். ஆய்வு நாளில் படகு உரிமையாளா்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, மற்றும் அனைத்து விதமான சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும் என்றார்.
வருகின்ற 22.05.2024, 23.05.2024, 24.05.2024 அன்று திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று இரவு தெப்பம் கட்டப்பட்டு வரும் கமலாலய குளத்திற்கு சென்று பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும், போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கிழக்கு கடற்கரை சாலை குறுக்கே ரயில் பாதை உள்ளது. இவ்வழியில் தினமும் திருவாரூர் – காரைக்குடி பாசஞ்சர் ரயில் உட்பட தொலைதூர ரயில்களும் சென்று வருகிறது. இந்நிலையில் சாலை பராமரிப்பு காரணமாக நாளை 15ந்தேதி காலை 9மணி முதல் மாலை 6மணி வரை பாண்டி இரயில்வே கேட் மூடப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.