India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை திருவாரூர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் இரயில்வே நிலையம் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று போக்குவரத்து நெரிசல் பற்றியும், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அவர் காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நீடாமங்கலம் பகுதியில் பழக்கடை வைத்துள்ளவர் அப்பு இவர் திருச்சிக்கு பணம் வாங்க அவரது நண்பரின் ஆட்டோவில் சென்ற பொழுது அவரை நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த வினோத், ராஜமுருகன் ஆகிய இருவரும் கொலை செய்தனர். இந்நிலையில். 28.4.24 அன்று நடைபெற்ற சம்பவத்தில் நேற்று ஆறு நபர்களை கைது செய்து போலீசார் மீது வழக்கு தொடரப்பட்ட சிறையில் அடைத்தனர்.
திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு தினமும் டெமு ரயில் (வண்டி எண் – 06 197) சென்று வருகிறது இதில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை போன்ற பகுதி மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர் இந்த நிலையில் நாளை 19ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பொறியியல் தொடர்பான பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் (பொ)கு. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் நீடாமங்கலம், கோட்டூரில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்கல்வியில் சேர, ஜூன் 7-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார்.
கொரடாச்சேரி போலீசார் நேற்று நடத்திய அதிரடி நடவடிக்கையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விஜய், சிவசங்கர், விக்னேஸ்வரன், தேவா என்கிற ஜெயவல்லவன் , மணிகண்டன், ரஞ்சித் குமார் ஆகிய 6 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்த போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி அதிவேகமாக சென்ற 2 தனியார் பேருந்துகள் விபத்தில் சிக்கியதில் 20 பேர் காயம் அடைந்தனர். முடிகொண்டான் பகுதியில் சென்று கொணடு இருக்கும் போது, அதிகளவு பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதற்காக 2 பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு சென்றது. இதில் ஒரு பேருந்து, அப்பகுதியில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 18) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில், கச்சனம் பகுதியில் எள் சாகுபடி பயிரை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கூறுகையில், தற்சமயம் பெய்ந்து வரும் மழையால் நீர் தேங்கியுள்ள இடங்களில் உடனடியாக வடிய வைத்து பருத்தி, எள் பயிர் வரக்கூடிய வேர் அழுகல், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மாவிரிடி போன்ற பூஞ்சான எதிரி உயிரி பயன்படுத்தலாம் என்றார்
Sorry, no posts matched your criteria.