Thiruvarur

News May 4, 2024

திருவாரூர்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகள் முழுவதும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் தட்பவெட்ப நிலை மாற்றத்தின் காரணமாக கோடை காலம் துவங்கி. இன்று கத்திரி வெயில் ஆரம்பித்துள்ளதால் அதிகப்படியான வெப்பம் 120 டிகிரிக்கு மேலாக அடித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ஆகையால் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

News May 4, 2024

சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்

image

மன்னார்குடி மாநில நெடுஞ்சாலையில் முதல் கட்டமாக அரசு மருத்துவமனை முதல் கீழப்பாலம் வரை 1200 மீ தூரத்திற்கு சுமார் 3.20  கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அகலப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏழு மீட்டர் அகலமுள்ள சாலை 10 மீட்டர் அகலமாக மாற்றபடுவதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என உதவி கோட்ட பொறியாளர் ஜெயராமன் தெரிவித்தார்.

News May 4, 2024

திருவாரூர் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் சிறப்பு!

image

முத்துப்பேட்டையிலுள்ள அலையாத்தி காடுகள், திருவாரூர்- தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர். கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு, கிளைதாங்கி ஆறு, நசுவினியாறு, பாட்டுவனாச்சி ஆறு, கண்டபறிச்சான்கோரையாறு, மரைக்காகோரையாறு ஆகிய ஆறுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடலில் கலக்கும் ஆழமற்ற பகுதி லகூன் எனப்படுகிறது. இங்கு வளரும் காடுகள் தான் அலையாத்தி காடுகள்.

News May 4, 2024

ஆலங்குடியில் இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை

image

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த மே 1 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற்றது. இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை மேலும் மே 6 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.. கட்டணம் ரூ 400. மேலும் விவரங்களுக்கு 04366-269407 என்கிற ஆலய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

News May 4, 2024

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மாணவர்கள்

image

சிங்கப்பூரில் நடைபெற்ற 137 “செஞ்சில் ஸ்ட்ரீட்” எனும் இடத்தில் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஶ்ரீ பதஞ்சலி யோகா பயிற்சி மையம் மாணவி ரிதண்யா தங்கப்பதக்கம் வென்றார் இந்தியா, அமெரிக்கா நேபாளம், பூட்டான், ஸ்ரீலங்கா, மலேசியாவைச் சேர்ந்த 400 பேர் பங்கேற்றனர். தமிழக மாணவர்கள் 5 இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.

News May 4, 2024

பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்

image

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நீடாமங்கலத்தில் பத்மஸ்ரீ ராமன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கத்தில் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்க தீர்மானிக்கப்பட்டது.

News May 3, 2024

திருவாரூர்: ஆசிரியருக்கு நம்மாழ்வார் விருது

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஹர்பன் பேங்க் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் முனைவர். ராஜ கணேசனுக்கு நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களை போட்டித் தேர்விற்கு தயார் செய்ததை பாராட்டும் விதமாக ஆசிரியருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் சார்பிலும் மாவட்ட கல்வி அலுவலர் சார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

News May 3, 2024

வாராந்திர காவத்து பயிற்சி – பார்வையிட்ட மாவட்ட எஸ்பி

image

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மோப்ப நாய் படை பிரிவினர்கள் கொண்டு வெடிப்பொருட்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறியும் ஒத்திகை நிகழ்ச்சி காவலர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. அதனை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மோப்ப நாய் பயிற்றுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
கவாத்து பயிற்சியின் போது அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள் அப்போது, ஆயுதப்படை அதிகாரிகள் பங்கேற்றனர்

News May 3, 2024

திருவாரூர் பாஜக ஒன்றிய தலைவர்கள் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட பாஜக ஒன்றிய தலைவர்கள் மற்றும் பிரபாரிகள் கூட்டம் திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் ச.பாஸ்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நன்னிலம், திருத்துறைப்பூண்டி நீடாமங்கலம் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் கொரடாச்சேரி ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News May 3, 2024

நீட் மாதிரி தேர்வு – மாவட்ட கல்வி அலுவலர் பார்வை

image

வருகின்ற 5 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் பயிற்சி வகுப்பு மார்ச் 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த மாணவர்களுக்கு மாதிரி தேர்வு மன்னார்குடி அரசு பள்ளியில் நடத்தப்பட்டது. தேர்வு முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

error: Content is protected !!