Thiruvarur

News May 6, 2024

எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் எஸ். பி திடீர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவ்வப்போது காவல் நிலையங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதுபோல் நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

News May 6, 2024

அரசு பள்ளி மாணவி 3 பாடங்களில் சென்டம்

image

நன்னிலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா வணிகவியல் பொருளியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதே பள்ளி மாணவி தாமரைச்செல்வி கணினி பயன்பாடுகள் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று உள்ளார். மாணவிகளையும் பயிற்றுவித்த ஆசிரியைகளையும் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் பாராட்டினர்

News May 6, 2024

திருவாரூர் : 12ம் வகுப்பு தேர்வு – 93.08% பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திருவாரூர் மாவட்டத்தில் தேர்ச்சி 93.08% பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 90.33 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 95.28 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

அரசு கல்லூரியில் சேர இன்று விண்ணப்பம்

image

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர். , திருத்துறைப்பூண்டி நன்னிலம் கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர www.tngasa.in இனைய முகவரியில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இனைய வழியில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

News May 6, 2024

வலங்கைமான் மது விற்றவர் போலீசார் சுற்றிவளைப்பு

image

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த வலங்கைமான் சந்திரசேகரபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த கலியபெருமாள் மகன் கார்த்திகேயன் (40) என்பவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்த 22 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை வலங்கைமான் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் கைப்பற்றினர்.

News May 5, 2024

திருவாரூர் மத்திய பல்கலையில் வேலை

image

தமிழ்நாடு மத்திய பல்கலை., திருவாரூரில் இயங்கி வருகிறது. இதில் காலியாக உள்ள ரிசர்ச் அசிஸ்டன்ட் பதவிக்கு தகுதியான நபரை நாளை 06.05.24 (திங்கட்கிழமை) நேரில் விண்ணப்பிக்க ( வாக் இன்) எம்பில், பிஎச்டி, எம்ஏ படித்து இருக்க வேண்டும் எனவும். இதில் தேர்ச்சி பெற்றால் சம்பளம் ரூ.37 ஆயிரம் வரை கிடைக்கும் என மத்திய பல்கலை., வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

News May 5, 2024

இலவச கண் சிகிச்சை முகாம்

image

மன்னார்குடி ரோட்டரி சங்கம் மீனாட்சி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் இன்று ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் மீனாட்சி சூரிய பிரகாஷ் முன்னிலை வகித்தார் 210 பேரை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் 68 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்து செல்லப்பட்டனர்

News May 5, 2024

திருவாரூர் கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை  12ஆம் தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியுள்ள +2 மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை https//www.dge.tn.nic.in/ ல் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News May 5, 2024

திருவாரூர் ஆட்சியர் தகவல்

image

2024-25 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 7,8,9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் சேர மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 10,11 தேதிகளில் திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு முன் வரும் 8 ஆம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News May 4, 2024

திருவாரூர்: 25 % இலவச சேர்க்கை விண்ணப்பிக்க

image

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 % இலவச சேர்க்கைக்கு மே.20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். rte.tnschools.gov.in இந்த இணைய தளம் மூலமாகவோ அல்லது மாவட்டத்தில் உள்ள கல்வி துறையின் அலுவலகங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதற்கான முடிவுகள் மே.27 ஆம் தேதி இணைய தளத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!