Thiruvarur

News May 10, 2024

திருவாரூர் : 13ல் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி 

image

திருவாரூர் மாவட்டத்தில் +2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி வரும் 13 ஆம் தேதி மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது என ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். மேற்படிப்பு வாய்ப்புகள் வங்கி கடன் வசதிகள் வேலைவாய்ப்புகள் குறித்தும் வழிகாட்டல் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திறன் பயிற்சி அலுவலக போன் எண் 04365-250126 தொடர்பு கொள்ளலாம்

News May 10, 2024

குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணா்வு

image

திருவாரூா் ரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் நேற்று வழங்கப்பட்டன. அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் ரயில் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டன.

News May 10, 2024

மும்மூா்த்திகள் ஜெயந்தி விழா

image

திருவாரூரில் உள்ள முத்துசுவாமி இல்லத்தில் கா்நாடக சங்கீத மும்மூா்த்திகள் ஜெயந்தி விழாவைத் நேற்று நடைபெற்றது. இதை ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஜெயந்தி விழாக் குழுத் தலைவா் ராமசுப்பு தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் நாராயணி நிதி நிறுவனத் தலைவா் காா்த்திகேயன், வேலுடையாா் கல்விக் குழுமத் தலைவா் கேஎஸ்எஸ். தியாகபாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

News May 9, 2024

திருவாரூரில் ஏற்றம் கல்வி அமைப்பு புதிய உதயம்

image

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரை தலைமையகமாக கொண்டு வனம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது இந்த அமைப்பின் மூலமாக ஏற்றம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் நன்றாக படித்து தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கு உதவும் என தெரிவித்தனர்.

News May 9, 2024

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு

image

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சமுதாயக் கல்லூரியில் நுழைவுத் தோ்வு இல்லா இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது. இதில், மின்னிதழ், ஊடகவியல், வணிகவியல் தொழிற்கல்வி, சுற்றுலா, விருந்தோம்பல் மேலாண்மை ஆகிய இளநிலைப் படிப்புகளுக்கும், கல்வெட்டியல், பாரம்பரிய மேலாண்மை ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News May 9, 2024

நான் முதல்வன் திட்ட ஆலோசனை கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ”நான் முதல்வன்” திட்டம் குறித்த ஆலோசனை ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியான கல்லூரி கனவு இந்த வாரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News May 9, 2024

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை முலமாக நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மே 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளிமிடப்படுவதாகவும் மாணவ, மாணவிகள் tnresults.nic. இந்த என்ற இணையதள முகவரியில் நாளை காலை முதல் தெரிந்து கொள்ளலாம் எனவும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

திருவாரூரில் 4 இடத்தில் குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்

image

ரூ.78 கோடியில் அம்ரூட் குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்மையப்பன் ஓடம்போக்கி ஆற்று கரையில் புதிதாக 5 ராட்சத போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிடாரங்கொண்டான், கொடிக்கால் பாளையம், கேடிஆர் நகர், ஈவிஎஸ் நகர் ஆகிய இடங்களில் இந்த நீர்த் தேக்க தொட்டிகள் கட்டப்படுகிறது.

News May 9, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!