India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் நெய்விளக்கு தோப்பு தெரு பகுதியில் பழைய இரும்பு கடை நடத்திவருபவர் மணிமாறன்(33). இவர் நேற்று நள்ளிரவு அவரது வீடு அருகாமையில் உள்ள ஓடம்போக்கி ஆற்றுபாலம் அருகே இயற்க்கை உபாதைகளை கழிக்க சென்றபோது ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டில் சென்றுகொண்டிருந்த மின்கம்பியை தவறுதலாக தொட்டுள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
திருவாரூர் மாவட்ட பள்ளி வாகனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும் பணி இன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சாரு ஸ்ரீ பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.பி. ஜெயக்குமார், கோட்டாட்சியர் சங்கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அமுதா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
திருவாரூரில் சட்ட தன்னாா்வலா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எம்.சாந்தி தெரிவித்துள்ளாா். திருவாரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அதன் கீழ் இயங்கும் வட்ட சட்ட பணிக் குழுவுக்கு 50 சட்ட தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் நீடாமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. இதற்கு மாணவ மாணவிகள் www.skilltraining.in.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஜுன் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் சரகம், அத்திக்கடை சோதனைச்சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று இரவுதிடீர் ஆய்வு செய்தார்கள் மேலும், CCTV Camera-வை ஆய்வு செய்து பணியில் இருந்த காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களுக்கு சோதனைச்சாவடி பணியின் முக்கியத்துவம் குறித்தும், சோதனை சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்
திருவாரூர் , நாகப்பட்டிணம் மாவட்ட எல்லை, கானூர் சோதனைச்சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இன்று (19.05.2024) திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, பணியில் இருந்த காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களுக்கு சோதனைச்சாவடி பணியின் முக்கியத்துவம் குறித்தும் வாகன தணிக்கை செய்வது குறித்தும் அறிவுரை வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள இன்று செய்தி குறிப்பில், மாவட்டத்தில் அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச சேர்க்கைக்கு நாளைக்குள் (20.05.24) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இணைய வழியாகவும், திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலம், மற்றும் வட்டார கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மின் சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் எனவும், அதன்படி ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை பயன்படுத்தவும், பிரிட்ஜ் கிரைண்டர் போன்றவற்றிக்கு உரிய முறையில் எர்த் கொடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் லலிதா மகேஷ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.