India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேட்டூர் அணை நிரம்பியுள்ளதை அடுத்து நேற்றைய தினம் அணை திறக்கப்பட்டது. இதனால் டெல்டா பகுதியான திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல் விதைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்ற வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் போன்றவற்றை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் உடனடியாக தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், ஒன்றிய அரசு மின்சார கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இன்று 29.07.2024 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திருவாரூர் மாவட்டத்தில் வக்ப் வாரியத்தில் பதிவு செய்து பணியாற்றும் உலமாக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலமாக்கள் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க 25ஆயிரம் ருபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அரசு மாணியம் வழங்கப்படும் என்றும், தகுதி உடையவர்கள் இதற்க்கான விண்ணப்பங்கள் அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.
திருவாருர் மாவட்ட மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும் ஹரிஹரன், கணேசன் ஆகிய இருவரும் வைப்பூர் காவல் சரகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்தவர்கள் மீது வழக்கு பதியாமல் காவலர்கள் இருவரும் ரு.40 ஆயிரம் லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, திருவாரூர் எஸ்பி காவலர்கள் இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்த 426 மனுக்களை அளித்தனர். மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருவாரூர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஆணைக்கிணங்க தலைமை கழகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ யிடம் நேரில் சென்று தமமுக நிர்வாகிகள் மனு அளித்தனர். கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்களம்பூர் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா இல்லை எனவும், அதனை வழங்க கோரியும் மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர் நேதாஜி சாலையை சேர்ந்த நாகராஜ் எனபவர் தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஓய்வு பெற்ற அவருக்கு பண பலன்கள் கிடைக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது நாகராஜனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி கொண்டு சென்றனர். ஆனால் நாகராஜன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அலுவலகத்தினை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்த வாரத்தில் மட்டும் கஞ்சா, சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 78 நபர்களை கைது செய்தும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 146 நபர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்றார் அவர்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின ஏற்பாடுகள் குறித்து கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் கூறியதாவது:- ஆகஸ்ட்.15 திருவாரூரில் நடைபெறும் சுதந்திர தின விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் தனி கவனம் செலுத்திட வேண்டும். இத்தினத்தை சிறப்பாக கொண்டாட அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்
Sorry, no posts matched your criteria.