India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நன்னிலம் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று திருச்சி மத்திய மண்டலம், திருச்சி மாநகர காவல் துறையுடன் தமிழ்நாடு மத்திய கழகம் மற்றும் மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையம் இணைந்து போலீஸ்கான மகிழ்ச்சி திட்ட துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜீவால் கலந்து கொண்டு மகிழ்ச்சி புத்தகத்தை வெளியிட்டார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே சென்ற உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
திருவாரூர் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கமலாம்பாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29.07.2024. ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கமலாம்பாள் ஆழி தேரோட்ட திருவிழா வரும் (06.08.24) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அதனையொட்டி தேர் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகின்றது.
பொதுமக்களின் வசதி கருதி இனி சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துகொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இனி விடுமுறை நாளான சனிக்கிழமை நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும். விடுமுறை நாள் ஆவண பதிவு கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க அரசு அறிவித்துள்ளதாக மாவட்ட சார்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக புதிய நிர்வாகிகளை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அறிவித்தார். அதன்படி கட்சியின் புதிய மாநில பொதுச்செயலாளராக குடவாசல் எஸ்.தினகரனை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 64 வயதாகும் இவர் கடந்த 1983-ஆம் ஆண்டு ஒன்றுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் திருவாரூர் மாவட்ட தலைவராகவும் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார்குடி அருகே நேற்று ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்குவதற்கு ரூ.16,500 கோடி இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார் என கூறினார்.
நீடாமங்கலம் ஆதனூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினையும், கோவில் வெண்ணி கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடையில் பொருட்களின் இருப்பு விவரமும், பொருட்கள் வாங்கவந்த குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்களின் தரம் குறித்தும் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார்.
மன்னார்குடி தாலுகா பாமணி உரக்கிடங்கில் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் 11.53 லட்சம் மதிப்பீட்டில் 5 டிராக்டர்களை பயனாளிகளுக்கு இன்று கூட்டுறவு நுகர்வோர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் வழங்கினர்.
மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் 20 கோடியே 90லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 33000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கை உணவு மற்றும் நுகர் பொருள் வாணிபக் கழக முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தனர்.
திருவாரூர் புலிவலம் பகுதி அரசு வீதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று மாவட்ட மேற்பார்வையாளர், முன்னாள் ஆட்சியர் நிர்மல்ராஜ் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.