India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்காலில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் திருவாரூரைச் சேர்ந்த கே.ரவிச்சந்திரன் மற்றும் திருவாரூரில் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் அவரது மனைவி விமலா பணியாற்றி வருகிறார். அவர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.11 கோடி அளவிற்கு சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
திருவாரூர் மாவட்ட தொடக்க பள்ளிகளில் 1முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 09 முதல் 21 வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் மாணவர்களின் நலன்கருதி தேர்வுகள் முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு வருகின்ற ஏப்ரல் 07 முதல் 17 வரை நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
காரைக்காலில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் திருவாரூரைச் சேர்ந்த கே. ரவிச்சந்திரன் மற்றும் திருவாரூரில் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி வரும் அவரது மனைவி விமலா மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.11 கோடி அளவுக்கு சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!
திருவாரூர் நகராட்சி ஆணையர் தாமோதரன் வெளியிட்ட செய்திகுறிப்பில், திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா வருகிற 7ஆம்தேதி நடைபெறுகிறது. அதன் காரணமாக தேர்வலம் வரக்கூடிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் 1ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் வரும் 2ஆம் தேதி நகராட்சி சார்பில் அகற்றப்பட்டு, அதற்கான செலவினம் சம்பந்தபட்டவரிடம் வசூல் செய்யபடும் என அறிவித்திருந்தார். SHARE NOW!
திருவாரூர் மாவட்டத்தில் 10 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை கொண்ட நிறுவனங்கள் பெண்கள் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக 4 பேர் கொண்ட குழுவினை அமைக்க வேண்டும் என ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு குழு அமைக்காத நிறுவனங்கள் மீது ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பதிவு செய்யப்பட்ட விவரத்தினை http://www.tnswd-poshicc.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுரை.
திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் ஏப்.7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு தேர் வடம் பிடிக்க வேண்டும் என்று நாகப்பட்டினம், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் ப.இராணி, பரம்பரை அறங்காவலர் ராம். தியாகராஜன் மற்றும் திருவாரூர் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க..
> சொர்ணபுரீஸ்வரர் கோயில் > தியாகராஜர் கோயில் >பிரம்மபுரீஸ்வரர் கோயில் >ஐராவதீஸ்வரர் கோயில் >கூத்தனூர் சரஸ்வதி கோயில் >முடிகொண்டான் கோதண்டராமர் கோயில் >மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் > குடவாசல் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் >வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில். இன்று ஞாயிறு என்பதால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வாருங்கள். மற்றவர்களும் அருள் பெற SHARE செய்து உதவுங்கள்.
திருவாரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில். இங்கு கையில் கலப்பையுடன் அருள்பாலிக்கிறார் பொங்குசனீஸ்வரர். இத்தலத்தில் சனிபகவான் குபேர மூலையில் மகாலட்சுமி ஸ்தானத்திலிருந்து பக்தர்களுக்கு இழந்த செல்வத்தை வழங்குவதாக ஐதீகம். சனிக்கிழமைகளில் இங்கு 27 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தீராத தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது. இதை மறக்காமல் உங்க நண்பர்களுக்கு பகிரவும்!
திருவாரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் இதுவரை 1579 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செளந்தரராசன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 60 வகையான நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.