India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்துறைப்பூண்டியில் பல்வேறு அரசு பணி திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் அரசால் வழங்கப்பட்டுள்ள பண்ணை குட்டை வெற்றி விவசாயிகள் பயனடையும் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வந்த விவசாயிகளின் பண்ணை குட்டையை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேற்று (ஜூன்.19) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பயனாளிகள் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், மாங்குடி, அம்மையப்பன், கமலாபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் கோடை வெயிலால் மக்கள் அவதி அடைந்த நிலையில் ஆறுதலாக இன்று பெய்த மழையால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது, மருத்துவமனைகளின் உள்ள இருக்கைகளின் தரம் குறித்தும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் கையிருப்புகள் குறித்தும் நோயாளிகள் எவ்வாறு வீட்டில் அளிக்கப்படுகிறார்கள் என்பன குறித்து மாவட்ட ஆட்சியர் மருத்துவர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் ஆட்சியர் சாருஸ்ரீ நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன்.21 அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கவுள்ளது. முகாமில் மாவட்டத்தில் 8ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ பி.இ, பி.டெக் முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம் என்றார்.
திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவம் சார்ந்த பல்வேறு கட்டிடங்களை திறந்து வைப்பதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடி மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமனின் சிகிச்சை நேரத்தில் அவருக்கு உதவியாக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன், வரும் 22ஆம் தேதி நடைபெற இருக்கும் நெல் ஜெயராமன் நினைவு நெல் திருவிழாவிற்கு வருகை தர இருப்பதாக, அவ்விழா ஒருங்கிணைப்பாளர் செ.ராஜீவ் தெரிவித்துள்ளார். அதற்கான விழா ஏற்பாடுகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்தவர் சேகர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவரது மகள் துர்கா தமிழ்நாடு அரசு பணியாளர்கள் குரூப் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்று நகராட்சி கமிஷனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பணி ஆணையை நேற்று மாநில தேர்வாணையத்துறை இயக்குனர் வழங்கினார். இந்நிலையில் தேர்வு பெற்ற துப்புரவு பணியாளரின் மகளான மாணவியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர புறவழிச்சாலை (Ring Road) திட்டத்திற்கான நில எடுப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், முதற்கட்ட சாலைப்பணிகளை விரைந்து துவங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா மன்னார்குடியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முத்துப்பேட்டை, பெத்தவேளாண்கோட்டகம் பாமணி ஆற்றுக்கரை ஓரம் உள்ள 2 தேக்கு மரங்கள் இடையே ஒரு பசு மாடு தலையுடன் சிக்கிக் கொண்டு இரண்டு நாட்களாக உயிருக்கு போராடி தவித்து வந்தது. நேற்று இரவு இதைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த மக்கள் பசுவை மீட்டு அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த டாக்டர் மகேந்திரன் காயம் அடைந்த பசு மாட்டிற்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
திருவாரூா் மாவட்டத்தில் நிதியுதவி பெற தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். அதில், தேவாலயங்களை பழுது பாா்த்தல், கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதுக்கேற்ப மானியத் தொகையை தமிழக அரசு உயா்த்தியுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு,விண்ணப்பிக்கும் தேவாலயங்கள் ஆய்வு செய்யப்பட்டு நிதியுதவி 2 தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.