India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. முன் விரோதம் என்ற பெயரில் படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது. தமிழ் நாடு அரசு விரைந்து செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கை 2024 நேரடி சேர்க்கை மூலம் நடைபெற உள்ளது. சேர்க்கைக்கு, www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் ஜூலை 15 ஆம் தேதி வரை மாணவ மாணவிகள் பதிவு செய்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் குத்து சண்டை போட்டி நாளை(ஜூலை 7) பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என திமுக விளையாட்டு மேம்பாட்டு குழு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே திரு ராமேஸ்வரம் ஊராட்சி கோட்டகச்சேரியில் கோயில் விழாவிற்கு விளம்பர பலகை வைக்கும் போது, விளம்பர பலகை மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மதன்ராஜ் என்ற சிறுவன் உயிரிழந்தார். அந்தச் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே செட்டி சத்திரம் கிராமம் பெரியார் நகரைச் சார்ந்த பிரவீன் சித்திரவேல் இந்தாண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். அவருக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். இவர் யூத் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒலிம்பிக்கிற்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் அனைத்து துறைகளிலும் சேர்வதற்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு கூட்டத்தின் கடைசி நாள் ஆக.,8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ஆக.,8 அன்று இறுதி கலந்தாய்வில் பங்கெடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் எம் பி வை.செல்வராஜ் இன்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்னவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் திருவாரூர் ரயில் சந்திப்பில் அடிப்படை கட்டமைப்புகள் உள்ளதால் அனைத்து ரயில்களுக்கான முதன்மை பணிமனை அமைக்க வேண்டும், திருவாரூர்,காரைக்குடி வழித்தடத்தை மின்மயமாக்குதல் வேண்டும், காரைக்கால் திருவாரூர், தஞ்சாவூர் தடத்தினை இரட்டைவழிப் பாதையாக அமைத்திடவும் கோரிக்கை வைத்தார்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.
திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை அருகே உள்ள கீழக்காடு கிராமத்தை சேர்ந்த நாடிமுத்து, இந்து முன்னணி திருவாரூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து மத ரீதியான கருத்துகளையும், இந்து மற்றும் முஸ்லீம்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நேற்று(ஜூலை 1) போலீசார் அவரை கைது சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கை – 2024 நேரடி சேர்க்கையின் மூலம் நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர் தங்களது நேரடி சேர்க்கைக்கு 01.07.2024 முதல் 15.07.2024 வரை இணையதளத்தில் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.