India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைய வரும் ஜூலை 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கால்நடை உதவி மருத்துவரிடம் அளித்து பயன்பெறலாம்.
திருவாரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் பூண்டி கே கலைவாணன் (29.6.2024) இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை துறை சார்ந்த மானிய கோரிக்கை விவாதத்திற்கு முன் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். அவருடன் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் ஊரக பகுதியில் வீடு பழுது நீக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய நாளை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று தெரிவித்துள்ளார். இதில் அரசு விதிகளின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் இதில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்ய குஷமா பொது இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் நடக்கும் இழப்பிற்கு முன்னெச்சரிக்கையாக இருக்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கி வருகிறது. இது தமிழக அரசின் ஏமாற்று நாடகம். தற்போது ஒடிசாவில் பதவியேற்ற புதிய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்குவது போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்கவேண்டும்” என கூறியுள்ளார்.
தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 வழங்கி வருகிறது. இது தமிழக அரசின் ஏமாற்று நாடகம். தற்போது ஒடிசாவில் பதவியேற்ற புதிய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 வழங்குவது போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 வழங்கவேண்டும்” என கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்து கோரிக்கை வைத்தனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், வேளாண்மை துறை இணை இயக்குனர் திரு ஏழுமலை ஆகியோர் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று, பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வராஜ் நாகை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
திருவாருர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகள் கஞ்சா, குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள், மது அருந்துதல் மற்றும் வைத்திருப்பவர்களின் விபரத்தை அறிந்தால் உடனே காவல்துறைக்கு தொலைபேசி எண். 9498100865 அல்லது Whatsapp முலம் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக காக்கப்படும் என திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் நேற்று தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.