India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி, Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500 முதல் Rs.88,638 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் <
தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற <
திருவாரூர் மாவட்டம் பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. பின்பு 2024-25 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி அளித்து பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களால் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8825669037) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
சுதந்திர தின தேசிய பண்டிகை விடுமுறை நாளான நேற்று (ஆக.15) திருவாரூர் மாவட்டத்தில், 34 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்; 32 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 66 நிறுவனங்கள் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாமல் பணியில் அமர்த்தியது கண்டறியப்பட்டு, அந்த 66 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக, உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் (15.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ அழைக்கவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரித்துவாரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாதாளேஸ்வரர் சுவாமிக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
AI-ன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி (AI) இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள்<
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வளாகத்தில் இன்று பொது விருந்து நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.
விளமல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன் ம்னற்றும் சுமதி, பள்ளி தலைமை ஆசிரியர் லதா, ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். மேலும், இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட 13 மாணவர்களுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.13 ஆயிரம் மற்றும் கல்விப் புரவலர் நிதிக்கு ரூ.1 லட்சமும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சற்குணம் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.