Thiruvarur

News July 15, 2024

கர்நாடகா அரசுக்கு எதிராக நாளை ரயில் மறியல் போராட்டம்

image

திருத்துறைப்பூண்டியில் நாளை(ஜூலை 16) காலை 8.15 மணியளவில் கர்நாடக அரசுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை இதுவரையிலும் வழங்காததை கண்டித்தும் அதை முறையாக பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் நாளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

News July 15, 2024

அக்னி பாத் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு – ஆட்சியர் தகவல்

image

அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீரர் ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து 08.07.2024 முதல் 28.07.2024 வரை இணையவழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைந்திருக்கும் நாள் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று(ஜூல்சி 15) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாரு ஸ்ரீ பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனர்.

News July 15, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் இன்று திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மோட்டார் சைக்கிள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

உயர் அழுத்த மின்பாதை திறப்பு விழா

image

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழ வீதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ரூ 2.40 கோடி செலவில் ஆழித்தேரோடும் நான்கு வீதிகள் மற்றும் சாமி புறப்படும் கீழவீதியில் உயர் அழுத்த மின்பாதைகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ இன்று திறந்து வைத்தார். இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை, பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ இன்று பெற்றுக் கொண்டார்.

News July 15, 2024

காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

விரிவாக்கம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புளியூர் அரசு உதவிபெறும் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

சட்டவிரோத செயல்களுக்கு எதிராக தொடரும் வேட்டை

image

தமிழக காவல்துறை தலைமை இயக்குனரின் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் பெருமளவில் காவலர்களை ஒன்று திரட்டி கஞ்சா புகையிலை மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை மணல் கடத்தல் சூதாட்டம் போன்ற செயலியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

திருவாரூர் ஆட்சியர் எச்சரிக்கை 

image

திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத மின்சாதன பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு தரம் குறைந்த பொருட்கள் என ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் தரம் இல்லாத பொருட்களும் பறிமுதல் செய்யப்படும். மேலும் தகவலுக்கு 8925534012 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

திருவாரூர் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதற்கு 45-55 வயது மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ளோர் <>http://www.msmeonline.tn.gov.in/uyegp<<>> என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!