Thiruvarur

News July 23, 2024

வாகனங்கள் ஏலம்; தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 185 இருசக்கர வாகனங்களை பொது ஏலத்தில் விட மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட ஏல குழுவினரால் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை 10.00 மணியளவில் ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர் நேரில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 23, 2024

மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

திருத்துறைப்பூண்டி, காமராஜர் சிலை அருகே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் ஜூலை 25-ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தெற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News July 23, 2024

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தஞ்சை ஆட்சியராக பதவியேற்பு

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆலங்கால் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரியங்கா, தஞ்சை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியராக பதவியேற்ற பிரியங்கா அவர்களுக்கு திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் சார்பில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

News July 23, 2024

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

image

திருவாரூர் மாவட்ட மக்களுக்கு அரசின் சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில், நத்தம் பட்டா மாறுதலுக்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

வேளாண் சார்ந்த தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம்

image

பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்
அல்லது ஏதாவது ஒரு வேளாண் சார்ந்த தொழில் துவங்கும் 21 முதல் 40 வயதுடைய பட்டதாரிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் வேளாண் பட்டாதாரிகள் வேளாண் அதிகாரி தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

திருவாரூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

image

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காமராஜ் தலைமையில் இன்று, தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசாங்கத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன கோஷங்கள் எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News July 23, 2024

மீனவர்கள் சாலை மறியலால் 3மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

image

முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மீனவர்களுக்கு பிரதமர் கிசான் திட்ட நிதி வாங்கியதால் 543 மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணமாக 8000 வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று 10 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தருவதாக கூறியதால் கலைந்து சென்றனர். இதனால் 3மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News July 22, 2024

தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

திருவாரூர் மாவட்டத்தில் பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26/7/2024 அன்று வெள்ளிக்கிழமை கூட்டுறவு நகர் பகுதியில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. பட்டதாரி இளைஞர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து, முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News July 22, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

திருவாரூர், ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 26 7 2024 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் எனவும் இக்கூட்டத்தில் வேளாண்துறை அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். எனவே விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சாரி ஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 22, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி தி. சாருஸ்ரீ அவர்கள் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு கு சண்முகநாதன் அவர்கள் உடன் இருந்தார்.

error: Content is protected !!