Thiruvarur

News July 25, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படவுள்ள குரூப் 2, 2 ஏ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற ஏதுவாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ கேட்டு கொண்டுள்ளார்.

News July 25, 2024

தஞ்சை மாவட்ட கலெக்டரை சந்தித்த எம்எல்ஏ

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று இருக்கும் பா.பிரியங்காவை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். ஆட்சியர் பிரியங்கா திருத்துறைப்பூண்டி தாலுக்கா, குரும்பல் ஊராட்சியில் அமைந்துள்ள ஆலங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 25, 2024

சென்னை போராட்டத்தில் 2,000 ஆசிரியர்கள் பங்கேற்ப்பு

image

சென்னையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து டிட்டோஜாக் சார்பில் 2000 பேர் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. திருவாரூரில், நேற்று நடைபெற்ற மறியல் போராட்ட ஆயத்தக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது. 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் கூட்டமைப்பின் மூலம் ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் சென்னை பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

News July 24, 2024

இலவச எம்பிராய்டரி தையல் இயந்திரம் பெற விண்ணப்பம்

image

திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்ட சமூகநலத் துறையின் சார்பாக இலவச எம்பிராய்டரி தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதி உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் 20 முதல் 40 வயதுடைய மகளிர், ஆண்டு வருமானம் ரூ.72000 க்குள் உள்ளவர்கள் உரிய கல்வி சான்றுகளுடன் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

image

திருவாரூர் புது காலனி பகுதியைச் சேர்ந்த அமர்நாத் (22), இவர் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூரில் இருந்து திருவாரூர் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழபணங்குடி அருகே லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 24, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர் முகாம்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறும். அந்த வகையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் முகாம் நடைபெற்றது. முகாமில் புதிதாக 21 பேர் மனு அளித்தனர் மனுக்களை அனைத்தையும் வாங்கி பார்த்து குறைகளை கேட்டு அறிந்தார்.

News July 24, 2024

எஸ் பி தலைமையில் உயர் அதிகாரிகள் சிறப்பு கலந்தாய்வு

image

திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுடன் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விசாரணை முடிவடையாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் மாற்று நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தும், சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News July 24, 2024

குருவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் சுமார் 60,000 ஏக்கரில் குருவை சாகுபடி நடந்துள்ளது. இந்நிலையில் குருவை சாகுபடிக்கு தேவையான விதை நெல்கள் கோ 55, ஆடுதுறை 63, ஏ.எஸ்.டி 16, ரகங்கள் கையிருப்பு உள்ளதாகவும், மேலும் யூரியா, காம்ப்ளக்ஸ் பொட்டாஸ் போன்ற உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் கையிருப்பு உள்ளதாகவும் வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

காலை உணவுத் திட்டத்தில் 40,104 மாணவர்கள் பயன்

image

திருவாரூர் மாவட்டத்தில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்’ மூலம் 40,104 மாணவர்கள் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். 750 கிராமப்புற அரசுப் பள்ளிகள் மற்றும் 27 பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் என மொத்தம் 777 பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

News July 23, 2024

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஜூலை.30-ஆம் தேதிக்கு முன்பாக ஊரக வளர்ச்சி முகமை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!