India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி. கே. கலைவாணன் எம்எல்ஏ-வை அவரது இல்லத்தில் தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா இன்று நேரில் சந்தித்து திருவாரூர் மாவட்டத்தில் அமையவுள்ள சிப்காட் தொழிற்சாலை குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்பாக கொண்டாட நாளை முதல் முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் அன்பு வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
சங்க காலம் முதல் திருவாரூர் ஆன்மிகம் மற்றும் ஆட்சியில் சிறந்து விளங்கும் நகரமாகும். சோழர்களின் 5 தலைநகரங்களில் ஒன்றாக திருவாரூர் விளங்கியது. பாண்டியர்கள், நாயக்கர்கள், விஜயநகர அரசர்கள், மராத்தியர்கள் என பல்வேறு கலாச்சாரங்களின் மையமாக திருவாரூர் திகழ்ந்த திருவாரூரில் தான், மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார். திருவாரூர் குறித்து மேலும் நீங்கள் அறிந்தது என்ன?
வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது வயலில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான சோலார் பேனலை கடந்த 14-ஆம் தேதி மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சரவணன் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீசார் அணியமங்கலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்து மறைத்து வைத்திருந்த 8 சோலார் பேனல்களை மீட்டனர்.
இந்திய தடகள வீரரான ராஜேஷ் ரமேஷ் (24) திருவாரூர் மாவட்டம் பேரளத்தைச் சேர்ந்தவர். இவர் 2022ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஆண்கள் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்க பதக்கமும் வென்று அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். மேலும் இந்தாண்டு ராஜேஷ் ரமேஷ், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து பாண்டிச்சேரி, பழனி, சென்னை, திருச்சி மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று 7 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் 40 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்னிலம் பேரூராட்சி, எழில் நகரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1.17 கோடி மதிப்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கடந்த 24.02.2024 அன்று திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டி மற்றும் திறனறி தேர்வு புத்தகங்கள் உள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிவித்துள்ள குருவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.