Thiruvarur

News July 29, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 78 பேர் கைது

image

திருவாரூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்த வாரத்தில் மட்டும் கஞ்சா, சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 78 நபர்களை கைது செய்தும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 146 நபர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்றார் அவர்.

News July 29, 2024

மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின ஏற்பாடுகள் குறித்து கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் கூறியதாவது:- ஆகஸ்ட்.15 திருவாரூரில் நடைபெறும் சுதந்திர தின விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் தனி கவனம் செலுத்திட வேண்டும். இத்தினத்தை சிறப்பாக கொண்டாட அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்

News July 28, 2024

வாகன சோதனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் இன்று நன்னிலம் உட்கோட்டம் குடவாசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அத்திக்கடை சோதனை சாவடியில் அதிரடியாக களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தக்க அறிவுரை வழங்கினார்.

News July 28, 2024

மாவட்ட வலுதூக்கும் போட்டி தொடக்க விழா

image

திருவாரூர் மாவட்ட வலுதூக்கும் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட அளவிலான வலுதூக்கும் செகண்ட் பெஞ்ச் பிரஸ் பிரிவு போட்டிகள் தொடக்க விழா இன்று வேலுடையார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் தியாகபாரி போட்டிகளை தொடங்கி வைத்தார். வலுதூக்கும் சங்க மாவட்ட தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார் ரோட்டரி துணை ஆளுநர் மீனாட்சி அசோகன் கணேசன் அறிவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News July 28, 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மாநில உரிமையை பறிக்கும் உதய் மின் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் நாளை (ஜூலை.29) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அக்கட்சி அறிவித்துள்ளது. நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என‌‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 28, 2024

திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி-க்கு பாராட்டு

image

திருத்துறைப்பூண்டி காவல் சரகத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தும், திருட்டுப் போன பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்ட திருத்துறைப்பூண்டி DSP சோமசுந்தரத்திற்கு நேற்று தஞ்சாவூர் காவல் சரகத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சங்கர் ஜிவால் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News July 28, 2024

ரூ.10 லட்சம் கோடி முதலீடு: அமைச்சர்

image

கொரடாச்சேரி பகுதியில் சிப்காட் அமைக்கும் பணிகளுக்காக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

News July 27, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 27, 2024

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கிய ஆட்சியர்

image

மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் பண்ணை சுற்றுலா திட்ட நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியருக்கு இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ மரக்கன்றுகள் வழங்கினார். இந்நிகழ்வில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் செல்வி கீர்த்தனா மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தார்.

News July 27, 2024

பாலம் கட்டும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

image

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாக்கம் கொத்தவாசல் ஆகிய பகுதிகளை இணைக்கும் வெட்டாற்று பாலம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தொழில் முதலீடு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!