India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு நலவாரிய கல்வி உதவித் தொகைக்கான காசோலையை ஆட்சியர் சாரு ஸ்ரீ பயனாளிகளிடம் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் உடனிருந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை 17ஆம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அரசு உரிமம் பெற்ற மதுபான கடைகள் மது கூடங்கள் விற்பனையில் ஈடுபடக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவித்திருக்கிறார். நாளை ஒரு தினம் அனைத்து கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடியிருக்க வேண்டும் எனவும் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் நான் முதல்வன் திட்டத்தின் உயர்வுக்கு படி என்கிற நிகழ்ச்சி திருவாரூரில் உள்ள வேலுடையார் பள்ளி வளாகத்தில் ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. 10 ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி பெறாமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து உயர்கல்வி பெறவைப்பதே இத்திட்டமாகும் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூா் மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி (செப். 16) இன்று நடைபெறவுள்ளது என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். செப்.16 தேதி திருவாரூா் வேலுடையாா் அரசு உதவிப் பெறும் பள்ளி நடைபெறும் முகாமில் உயர்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான ஊக்குவித்தல் மற்றும் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.
திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, தகுதியான கோரிக்கைகளுக்கு தீா்வு காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம், செப்.20 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது. உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களும் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
திருவாரூரை மையமாகக் கொண்டு செயல்படும் வனம் தன்னார்வ அமைப்பின் சார்பில் சிறந்த குறும்படத்துக்கான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து அதிகபட்சம் 3 நிமிடத்திற்குள் உள்ள குறும்படங்களை அனுப்பி வைக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.25 ஆம் தேதிக்குள் 9840321522 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக தகவலை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் இன்று திருவாரூர் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்வதையடுத்து இன்று மதியம் திருவாரூர் வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.
திருவாரூர் அருகே உள்ள மடப்புரம் நண்பர்கள் மற்றும் மடப்புரம் கிரிக்கெட் கிளப் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி திருவிழா வரும் 17.09.24 திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படும், என மடப்புரம் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு +2 தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க முடியாத சூழல் உள்ளவர்களுக்கான உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு முகாம் மாவட்டத்தில் செப். 16, 26 தேதியன்று வேலுடையார் பள்ளியிலும், செப். 19, 27 தேதிகளில் மன்னார்குடி பின்லே பள்ளியிலும் நடைபெறுகிறது. பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வந்து கல்வி கடன் உயர்கல்வி வாய்ப்பு பெற ஆட்சியர் அழைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ 19 கோடியே 23 லட்சம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டதாக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1963 வழக்குகள் கோப்பிற்கு எடுக்கப்பட்டு அதில் 643 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.