India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் ராஜமன்னார்குடி ஸ்ரீ வித்யா ராஜகோபால் சுவாமி திருக்கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ தாயார் சக்கரை பொங்கல் திருப்பாவாடை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுவாமிக்கு சர்க்கரைப் பொங்கல், நெய் வேத்தியம் படையலிட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்பலை சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் ஆட்சியர் இன்று (ஆக.09) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்க கடன்மேளா வரும் 14ஆம் தேதி குடவாசல்,21ஆம் தேதி வலங்கைமான்,28ஆம் தேதி நீடாமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது.கடன் மேளாவில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று (ஆக.09) வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் விருப்பம் உள்ளவர்கள் https://www.tahdco.com/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி அருகே நடுவக்களப்பால் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகளது வளைகாப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று பொருட்கள் வாங்க கடை வீதிக்கு வந்த மாரிமுத்துவை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த கலப்பால் போலீசார் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 10.08.2024 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை அந்தந்த தாலுக்கா பகுதியில் நடைபெறுகிறது. இதில் மனு அளித்து பயன் பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியில் நேற்று மாலை, இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர் முழுவதும் எறிந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரைக் கொண்டு அணைத்துள்ளனர். ஆனால் இரு சக்கர வாகனமும் அடையாளம் தெரியாத நபரும் முழுவதுமாக எரிந்து கருகிய நிலையில், இது குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் தெற்கு மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தொகுதி திருத்துறைப்பூண்டி மன்னார்குடி இரண்டு தொகுதிகளையும் இணைத்து செயல்வீரர் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி மன்னார்குடி தனியார் அரங்கில் நடைபெற உள்ளது. இது அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய பிறப்பு, இறப்பு பதிவாளர் அறிவுரைப்படி 01.01.2000 தேதியிலிருந்து 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளில் பெயரை சேர்த்து பிறப்பு சான்றிதழ் பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் நீட்டிப்பு 31.12.2024க்கு பிறகு மீண்டும் வழங்க இயலாது. எனவே, திருவாரூர் மாவட்ட மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-காரைக்குடி ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த ரயில் எண் 06051, 06052 இனி தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரம் வரை 22.8.2024 முதல் 14.9.2024 வரை வாரந்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு முன் இந்த ரயிலானது வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவாரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7,239 விலை கிடைத்தது. இதனால் ஒரே நாளில் ரூபாய் 1 கோடியே 20 இலட்சம் என்கிற அளவில் ஏலம் நடைபெற்றது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பருத்தியை நன்றாக உலர்த்தி எடுத்து வந்தால் பருத்திக்கு நல்ல விலையை பெறலாம் என்று விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.