Thiruvarur

News August 11, 2024

திருவாரூர் அஞ்சலகத்தில் தேசிய கொடி விற்பனை

image

நாகப்பட்டினம் கோட்ட அஞ்சல் துறை சார்பில் வரும் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை கோட்டத்தில் உள்ள நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அஞ்சலகங்களில் ஒரு தேசிய கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றி வைக்க பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி அஞ்சலகத்தில் கொடி விற்கப்படுகிறது.

News August 11, 2024

திருமாவளவனை சந்தித்த திருவாரூர் நிர்வாகி

image

திருவாரூர் விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் மடிவழகன், இன்று(ஆக.,11) சென்னையில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனை நேரில் சந்தித்தார். முக்கிய நிகழ்வுகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 11, 2024

முத்துப்பேட்டை அருகே கொலை தொடர்பாக 3பேர் கைது

image

முத்துப்பேட்டை தாலுகா நடுவக்களப்பால் கடைவீதியில் நேற்று(ஆக.,10) மாரிமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய:து. இந்நிலையில் நேற்று இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கோபிநாத்(21), வீரமணி(23), பிரேமா(46) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் விசாத்திதல் சம்பந்தப்பட்டு இருப்பதாக அறிந்து மூவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

News August 10, 2024

உயிருக்கு போராடிய குயிலுக்கு தீவிர சிகிச்சை

image

முத்துப்பேட்டை ஆசாத்நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று குயில் ஒன்று காக்கைகள் கொத்தி உயிருக்கு போராடியது. இதனை மருத்துவர் சையது அபுதாகிர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து, இன்று 2-வது நாளாக கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இன்னும் இரண்டு நாளில் குணமாகி நல்ல நிலைக்கு வந்து பறக்கும் என மருத்துவர் கூறினார்.

News August 10, 2024

மாமனாரை வெட்டி கொன்ற மருமகன்

image

திருமக்கோட்டை நல்லான்பிள்ளை தெருவை சேர்ந்தவர் சின்னப்பா. நேற்று இரவு வீட்டில் இருந்த போது அவரது மருமகன் தாமஸ்க்கும் சின்னப்பாவிற்கும் தகராறு ஏற்பட்டு வாக்கு வாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த தாமஸ் அரிவாளால் சின்னப்பாவை வெட்டிவிட்டு தப்பியோடினார். சின்னப்பாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் தாமஸை கைது செய்தனர்.

News August 10, 2024

திருவாரூர் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, திருவாரூர், நன்னிலம், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

திருவாரூரில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்தில் ஆக.,15ம் தேதி சுதந்திர தினம் அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். அதில் சுய சான்றிதழ் மூலம் உடனடி கட்டட அனுமதி வழங்குதல் மற்றும் இணையத்தளம் மூலம் வரி செலுத்துதல் குறித்தும் ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதம் செய்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 10, 2024

திருவாரூர் கோயிலில் இதை பார்த்தது உண்டா?

image

பண்டைய காலங்களில் பயன்படுத்திய இசைக் கருவிகள் அழிந்து வரும் நிலையில் பஞ்சமுக வாத்தியம் எனும் கருவி தற்போது தமிழ்நாட்டில் மிகச் சொற்பமாகவே இசைக்கப்பட்டு வருகிறது. இதை நாம் கோயில் சிற்பங்களில் அதிகம் பார்த்திருப்போம். குடமுழா, குடபஞ்சமுகி என்றும் அழைக்கப்படும் இந்த இசைக்கருவி இன்றும் திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் இசைக்கப்படுகிறது. இந்த அரிய இசைக் கருவியை நீங்க பார்த்திருக்கீங்களா?

News August 10, 2024

உயர் கல்வி கடன் பெற விழிப்புணர்வு முகாம்

image

திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களின் உயர் கல்விக்கான கடன் பெறுவது தொடர்பான முகாம் நடைபெறவுள்ளது. வரும் 13ஆம் தேதி மன்னார்குடி தாலுகா அலுவலகத்திலும், 16ஆம் தேதி திருவாரூர் தாலுகா அலுவலகத்திலும் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் அனைத்து வங்கியாளர்களும் கலந்து கொள்வர். மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

திருவாரூரில் இன்று சிறப்பு குறைதீர் முகாம்

image

திருவாரூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் இன்று(ஆக.,10) காலை 10 மணி முதல் 1 மணி வரை தாலுகா வாரியாக 10 இடங்களில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அந்தந்த பகுதி பொதுமக்கள் ரேஷன் அட்டை மற்றும் உணவு பொருட்கள் தரம் குறித்த புகார்களை கோரிக்கை மனுக்களாக கொடுத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!