Thiruvarur

News October 27, 2024

திருவாருர் மாவட்டத்தில் 40 பேர் கைது

image

திருவாருர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்தந்த பகுதி காவல் சரக போலீசார் தொடர்ந்து பகல் மற்றும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 40 நபர்கள் கைது செய்யப்பட்டு போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என எஸ்பி ஜெயக்குமார் இன்று தெரிவித்தார்.

News October 27, 2024

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த அதிமுக அமைச்சர்

image

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை மற்றும் பூச்செண்டு வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News October 27, 2024

திருவாரூர் ரேஷன் கார்டு தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தீபாவளியை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் உள்ள ஓஏபி அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பயனாளிகளுக்கு வழங்க வேண்டும், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சார்பில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 27, 2024

ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்

image

தமிழகம் முழுவதும் இன்று (27-10-2024), தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 26, 2024

தமிழகத்தில் 4 லட்சம் டன் நெல் கொள்முதல்: ராதாகிருஷ்ணன் பேட்டி

image

கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதிலும் இந்த ஆண்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 928 கோடி பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 56 ஆயிரத்து 883 பேர் பயனடைந்துள்ளனர். குறுவை கொள்முதல் நிறைவடையும் நிலையில் உள்ளது என்றார் அவர்.

News October 26, 2024

திருவாரூர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூா் மாவட்டத்தில் பசுந்தீவன வளா்ப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். 2024-25-ஆம் நிதி ஆண்டிற்கு கால்நடை பராமரிப்புத்துறையால், மாவட்டத்தில் பாசனவசதியுள்ள இடங்களில் பசுந்தீவன சாகுபடி 20 ஏக்கரிலும், மானாவாரி நிலங்களில் 50 ஏக்கரிலும் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும்.

News October 25, 2024

வலங்கைமான் வெடி கடைகளில் எஸ்.பி ஆய்வு 

image

 வலங்கைமான் பகுதியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற வெளிக்கடைகளில் இன்று இரவு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெடி கடைகளில் தீயணைப்பு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா என மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் வலங்கைமான் போலீசார் உடனிருந்தனர். 

News October 25, 2024

திருவாரூர் மாவட்டம் பற்றிய முக்கிய தகவல்கள்

image

திருவாரூர் மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு விகிதம் 82.86 ஆகும். இதில் ஆண்களின் படிப்பறிவு விகிதம் 89.13-ம், பெண்களின் படிப்பறிவு விகிதம் 76.72-ஆகவும் உள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மாவட்டத்தில் இந்துக்கள் 89.60 சதவீதமும், இஸ்லாமியர்கள் 7.60 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 2.63 சதவீதமும் உள்ளனர். ( தகவல்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

News October 25, 2024

மேற்குறையை பிரித்து திருட்டு

image

மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்ற அவர், பேக்கரியின் ஓடுகள் உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது ரூபாய் 30,000 திருடு போனது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

News October 24, 2024

திருவாரூரில் உலக போலியோ தின விழிப்புணர்வு

image

திருவாரூரில், திருவாரூர் ரோட்டரி சங்கத்தினால் நடத்தப்பட்ட உலக போலியோ தின விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே.கலைவாணன், திருவாரூர் வார்டு கவுன்சிலர் அகிலா சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.