Thiruvarur

News August 18, 2024

திருவாரூரில் சர்வதேச திரைப்பட விழா

image

திருவாரூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதி வரை தைலம்மை திரையரங்கில் சர்வதேச திரைப்பட விழா லோகோ வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் கொள்ளு பேரன் கொள்ளுப்பேத்தி திருவாரூரில் வசிப்பதை அறிந்து அவர்களை மேடையில் அறிமுகப்படுத்தி பாராட்டி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

News August 18, 2024

நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடல்

image

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக 3 நாட்களுக்கு இரவில் கேட்மூடப்படுகிறது. அதன்படி, இன்று முதல் ஆக.20ஆம் தேதி வரை இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும். எனவே, பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் மாற்றுப்பாதையில் செல்லுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News August 18, 2024

மன்னார்குடியில் மீன்கள் விலை நிலவரம்

image

மன்னார்குடியில் இன்றைய மீன்கள் விலை நிலவரம் வெளியானது. கடல் மீன்களான கிளங்கா ரூ. 200, சங்கரா ரூ.350, நண்டு ரூ.350, இறால் ரூ.400, மத்தி ரூ.150, பாறை ரூ.500, வஞ்சிரம் ரூ.700, கிளிகொடுவா ரூ.400, மதனகொடுவா ரூ.300, கானாங்கெளுத்தி ரூ.200க்கு விற்பனையானது. உள்ளூர் மீன்களான உயிர் கெண்டை ரூ.200, ஐஸ் கெண்டை ரூ.160, பாப்பு கெண்டை ரூ.160, விரால் ரூ.400 – ரூ.600க்கும் விற்பனையாகிறது.

News August 17, 2024

பயங்கர ஆயுதங்களுடன் 5பேர் கைது

image

நீடாமங்கலம் பூவனூர் ராஜ்குமார் கொலைக்கு பழி தீர்க்க, பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி இன்று நீடாமங்கலம் சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பயங்கர ஆயுதங்களுடன் ஒன்று கூடியிருந்த தென்னரசு (எ) தனுஷ்கர், தயா (எ) தயாநிதிமாறன், ஷியாம், ஆகாஷ் (எ) பிரேம்குமார், மாணிக்கம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 17, 2024

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ஆம் தேதி மாலை 4 மணியளவில் திருவாரூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News August 17, 2024

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது

image

மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பூரணி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். இதில் ஒருவருக்கு பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ 12ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது மண்டல துணை வட்டாட்சியர் நாகராஜ் கையும் களவுமாக பிடிப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

News August 16, 2024

திருவாரூர் எஸ்பி நேரில் ஆய்வு

image

நீடாமங்கலத்தில் காவலரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடி மனோ நிர்மல் ராஜை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் காயம் அடைந்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட காவலர் விக்னேஷ் சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் ஆகியோரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்றிரவு திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் நேரில் உடல்நிலை குறித்து விசாரணை நடத்தி ஆறுதல் கூறினார். அப்போது காவல் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

News August 16, 2024

திருவாரூரில் ரவுடி சுட்டுப் பிடித்த உதவி ஆய்வாளார்.

image

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரவுடியை காவல் ஆய்வாளர் சுட்டுப் பிடித்தார். ஆதனூர் கிராமத்தில் காவலர் விக்னேஷை வெட்டி விட்டு தப்பியோட முயன்ற ரவுடி மனோ நிர்மல்ராஜை, காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் துப்பக்கியால் சுட்டு ரவுடியை பிடித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News August 16, 2024

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

image

நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் மதிய உணவு இடைவேளை நேரத்தில் சக நண்பர்களோடு பள்ளி அருகே உள்ள மகா ராஜபுரம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆற்றில் நீரின் சுழற்சியில் சிக்கினார். பின்னர் மாணவனை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.

News August 16, 2024

கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

வடபாதிமங்கலம் அருகே கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையற்றார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜெகதீசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

error: Content is protected !!