India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதுகலை பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மேற்கு வங்கத்தின் மாநில அரசு நேர்மையான முறையில் நீதி விசாரணை செய்ய வேண்டும் என திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருத்துறைப்பூண்டி வட்டம், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் மழைநீர் வடிகால் கட்டி மூடப்படாமல் இருந்த நிலையில், இதுகுறித்து நேற்று (ஆகஸ்ட்.18) Way2News செயலியில் செய்தி வெளியாகியது. அதன் எதிரொலியாக இன்று உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் வடிகாலை மூடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மன்னார்குடி டூ மானாமதுரை வரை டெமு ரயில் கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் முயற்சியில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் கடந்த எட்டு மாதங்களாக மானாமதுரை செல்லாமல் காரைக்குடி வரை மட்டுமே செல்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த ரயிலை மீண்டும் மானாமதுரை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர் நல சங்க தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் அருகே இலவங்கார்குடியில் வீட்டில் தனியாக இருந்த பிரபா (40) என்ற பெண்ணை நேற்று கொலை செய்து, நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சென்ற திருவாரூர் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பிரபா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் வாரம்தோறும் திங்கள் கிழமை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று நடைபெறும் கூட்டத்திற்கு வருகை தந்த ஆட்சியர் சாருஸ்ரீ, மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கு நேரில் சென்று மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
நீடாமங்கலம் ஆலங்குடி பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் ஆலயம் எம் குலம் பகுதியில் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இருதரப்பினருக்கு இடையே பிரச்சனை நிலவி வருகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்வில் ஒரு தரப்பினர் காவல் துறை பாதுகாப்புடன் தரிசனத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
திருத்துறைப்பூண்டி காமராஜ் தெருவை சேர்ந்தவர் யோகாம்பிகை. திருத்துறைப்பூண்டி பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வந்த நிலையில், கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இதே செயலில் ஈடுபட்டதால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரைத்தார். ஆட்சியரின் உத்தரவின்படி நேற்று திருச்சி மத்திய சிறை சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்ட ஆறுகளில் அதிகளவு தண்ணீர் ஓடுவதால் சிறுவர்களை குளிக்க அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். காவிரி நீர் ஆற்றில் அதிகமாக செல்வதால்; வெண்ணாறு, பாமணி ஆறு, கோரையாறு, வெட்டாறு ஆகிய ஆறுகளில் குளிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
திருவாரூரில் ஸ்ரீ ராம் இலக்கியக் கழகம் மற்றும் புதுயுகம் தொலைக்காட்சி இணைந்து நடத்திய திருக்குறள் விழா இன்று (18-08-2024) சாய்ராம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் கலந்து கொண்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது திருவாரூர் மாவட்டத்தில் மாலை 5 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.