India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் ஆணையம் உத்தரவு படி மாவட்டத்தில் வரும் செப்.1ஆம் தேதி முதல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் தரமான புகைப்படம் மாற்றுதல் ஆகியவை இன்று முதல் மேற்கொள்ளலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவாரூரில் தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்படவுள்ளன. ஆக.25ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், இந்த போட்டிகளை நடத்த 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என இளைஞர் நல விளையாட்டு மேம்பாட்டு குழு அறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கலை திருவிழா 2024- 25 அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 1-8 வகுப்பு மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டியில் பங்குபெறும் மாணவர்களை 19.08.2024 முதல் 21.08.2024 வரை EMIS பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 21.08.2024 பிறகு பள்ளி அளவில் பதிவேற்றம் செய்ய இயலாது ஆகையால் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களை போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் பவுத்திரம் மாணிக்கம் பகுதியில் 18ஆம் தேதி அன்று பிரபாவதி என்ற பெண்ணின் கழுத்தை அறுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இன்று சந்தோஷ் என்று 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகை பணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
திருவாரூர் அருகே இலவங்கார்குடி பகுதியில் நேற்று இரவு பிரபாவதி (40) என்ற பெண்மணி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் சந்தோஷ் (25) அவரது சகோதரர் சஞ்சய் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இருவரிடம் இருந்து பிரபாவதியின் செல்போன் மற்றும் தாலி செயின் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மூலம் கொள்முதல் செய்யும் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே தமிழக அரசு ஈரப்பதம் சதவீதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வருகின்ற 24ஆம் தேதி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நூலகம், பூங்காக்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தூய்மை பணியினை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகளில் காலை நேர வழிபாட்டு கூட்டத்தின் போது தூய்மை இந்தியா உறுதிமொழி எடுக்க அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “விரைவில் திருவாரூர் மாவட்டம் முதன்மை மாவட்டம் ஆக வாய்ப்புள்ளது. ஒரு பானை சோற்றக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மன்னார்குடியில் மட்டுமே ஆயிரத்து ஐநூறு கோடிக்கு திட்டங்கள் குவிந்துள்ளன. நீடாமங்கலம் மேம்பாலம் போன்ற முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன” என்று தெரிவித்தார்.
கொல்கத்தாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு திருவாரூர் ரயில் நிலையம் அருகில் நேற்று மாலை சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட கன்வீனர் மாலதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 9 மணியளவில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ள 18-40 வயதுடைய வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE NOW!
Sorry, no posts matched your criteria.