India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சுமார் 30க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்பட்டது. தொடர் மின்வெட்டால் பொதுமக்கள், தாய்மார்கள், குழந்தைகள் கடும் அவதியடைந்தனர். இதனால், வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் பழுதானது. இந்த தொடர்மின்வெட்டை சீர் செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
நேரடி உதவி ஆய்வாளர் அடிப்படை பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் கடந்த (04.03.2024)-ம் தேதி செய்முறை பயிற்சிக்காக அறிக்கை செய்து, செய்முறை பயிற்சியிலுள்ள 18-உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (25.08.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வழங்கி, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள ‘சிக்காகோ – அமெரிக்க தமிழர்களுடனான சந்திப்பு’ நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் தமிழ்நாடு அரசு தொழில்துறை அமைச்சரும், மன்னார்குடி எம்.எல்.ஏ-வுமான TRB ராஜா தலைமையில் சிக்காகோவில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் பிட்னஸ் அசோசியேசன் நடத்தும் மாநில அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அர்பன் பேங்க் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட வலுத்தூக்கம் சங்கம் இணைந்து நடத்துகிறது. இதில் இளைஞர்கள் தங்களது உடற்கட்டு திறனை வெளிப்படுத்தி ஆணழகன் போட்டியில் போட்டியிடுகின்றனர்.
திருவாரூர் ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 4,054 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு போன்ற உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் எண்ணிக்கை, அவற்றை பாதுகாப்பது, குறித்த நேரத்தில் பாதுகாப்பாக எடுத்துச் சென்று கரைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
திருவாரூரில் இன்று (24-08-2024) முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திமுக மாவட்ட இளைஞரணி சார்பாக நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி. கே. கலைவாணன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பனங்குடி எஸ்.குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் கீழ் நடைபெற உள்ள இப்போட்டிகளில் பங்குபெற http://sdat.in/cmtrophy/player-login/ என்ற இணைய முகவரியில் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கலை அறிவியல் கல்லூரி . மத்திய பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி, ஐடிஐ, மருத்துவம், பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட 4,054 விண்ணப்பங்களில் 500 மாணவர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஏடிஎம் கார்டு மற்றும் உயர்கல்வி வழிகாட்டு கையேடு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 102 அங்கன்வாடி, 105 பள்ளிகளில் உள்ள 19 வயது நிரம்பிய சுமார் 34,000 மாணவ, மாணவிகளுக்கு சுகாதார துறை சார்பில் நேற்று தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பூச்சி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிள்ளிவளவன் தலைமையில் சுகாதார துறையினர் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.