Thiruvarur

News September 2, 2024

பந்தலடி அருகே எஸ்பி ஆய்வு

image

மன்னார்குடி பந்தலடி அருகே நேற்று முன்தினம் இரவு நம்பிராஜன் பீர் முகம்மது ஆகிய நண்பர்களோடு பேசிக் கொண்டு இருந்த போது வாய்த்தகராறில், ஜெயநாராயணன் என்பவர் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவ நடந்த இடத்தை நேற்று மாலை நேரில் ஆய்வு செய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார்.

News September 2, 2024

பேரளத்தில் ஆடுகளை திருடிய 5 பேர் கைது

image

பேரளம் கோவில் தெரு சுபாஷ் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை சிலர் டாட்டா சுமோவில் திருடி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார். அப்பொழுது அதிலிருந்த ராஜேஷ்கண்ணன், சோலைக்குமரன், வீரமணிகண்டன், இராஜசேகரன், லோகராம் ஆகியோரை கைது செய்த போலீசார், கார் மற்றும் ஆடுகளை பறிமுதல் செய்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

News September 2, 2024

மன்னார்குடியில் வெள்ளிக் கவசத்தில் பரமநாயகி அம்மன்

image

மன்னார்குடி ருக்மணி குளம் தென்கரையில் உள்ள பரமநாயகி அம்மன் கோவிலில் ஆவணி மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஒட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மூலவர் பிரமநாயகம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. மலர் மாலைகள் சூட்டி சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது.

News September 1, 2024

திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் விலை ரூ.2450

image

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கரீப் பருவம் 2024-25க்கு கிரேடு ‘ஏ’ ரக நெல் ரூ.2450-க்கும், பொது ரக நெல் ரூ.2405-க்கும் கொள்முதல் செய்யப்படும் என திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு மூட்டை நெல்லின் எடை (சாக்கு உட்பட) 40.580 கிலோ இருக்க வேண்டும்.

News September 1, 2024

திருவாரூர் ரயிலை திருச்சி வரை இயக்க கோரிக்கை

image

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன் ரெயில்வே துறைக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், திருவாரூர் பட்டுக்கோட்டை மெமோ ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 8 மணிக்கு இயக்கப்படும் இந்த ரயிலை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் வழியாக திருச்சி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

News September 1, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு அளவானது (மில்லிமீட்டரில்) நேற்று (ஆக.31) காலை 6 மணி முதல் (செப்.1) காலை 6.00 மணி வரையிலான நிலவரப்படி, திருவாரூர் – 0.0, நன்னிலம் – 0.0, வலங்கைமான்-6.2, மன்னார்குடி- 27. நீடாமங்கலம்- 22.6, பாண்டவையாறு-2.6 என மொத்தம் -77.4 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மன்னார்குடியில் 27 ம.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

News September 1, 2024

மன்னார்குடி அருகே பெண் மரணம்

image

மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (36). இவருக்கும், தஞ்சை பகுதியை சேர்ந்த பவானி (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் பவானி தனது அறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில் பவானியின் தாயார் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரவாக்கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

News September 1, 2024

திருத்துறைப்பூண்டியில் இலவச காப்பீடு அட்டை முகாம்

image

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை இலவச காப்பீடு அட்டைப் பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் (செப்.01) இன்று திருத்துறைப்பூண்டி புனித தெரசா தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் பதிவுசெய்ய ஸ்மார்ட் கார்டு (ரேஷன் கார்டு) மற்றும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். பதிவு எண் உடனே தரப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

நன்னிலம் திமுக உறுப்பினர் கூட்டத்தில் MLA

image

பூந்தோட்டம் M.K மஹாலில் இன்று (31.08.2024) மதியம் 11.00 மணியளவில் நன்னிலம் தெற்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திருவாரூர் MLA பூண்டி. கே. கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வே.மனோகரன் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் செல்வராஜ், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 31, 2024

வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ரத்து

image

சென்னை-வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் நாளை (செப்.1) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.1) இரவு 11.50-க்கு புறப்பட வேண்டிய ரயிலும், மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து திங்கட்கிழமை (செப்.2) இரவு 7.10 மணிக்கு இயக்கபட இருந்த ரயிலும் ரத்து செய்ய படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

error: Content is protected !!