India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து 14 மற்றும் 17 வயதிற்குப்பட்டோர் பிரிவில் வாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் கலைவாணனையும் தலைமை ஆசிரியர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செப்டம்பர் 2 இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் மாநிலத் தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிழற்குடை அமைத்து காய்கறி சாகுபடி செய்திடவும், உணவுக் காளான் உற்பத்தி குடில் அமைத்திடவும் மானியம் பெறும் விவசாயிகளுக்கு பணிக்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசு உதவிகளை மனுக்களாக எழுதி ஆட்சியர் சாரூஸ்ரீ அவர்களிடம் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் 02.09.2024 மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 448 மனுக்கள் பெறப்பட்டன.
திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலகு சார்பில் ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று தொடங்கியது. இந்த பேரணியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இராசி மணலில் தமிழ்நாடு அணைக்கட்ட வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மதிமுக எம்பி துரை வைகோவை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.
திருவாரூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர் மற்றும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் மன்னார்குடி ஓன்றியம், 3-ஆம் சேத்தி பஞ்சாயத்து, அண்ணா மலை நகரில் உள்ள ‘மதி சிறகுகள்’ எனும் தொழில் மையத்தில் மிக குறைந்த செலவில் பல்வேறு சேவைகளை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் ச.சுசோபிதன் அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று முதல் இடம் பெற்றார். பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மாணவனுக்கு சான்றிதழ் மற்றும் சுழற் கோப்பையை வழங்கி பாராட்டுகள் தெரிவித்தார்.
குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7,639 மற்றும் குறைந்த பட்சமாக ரூ.6,809-க்கும் விற்பனையானது. மொத்தத்தில் 43.31 குவிண்டால் பருத்தி ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 158 ரூபாய்க்கு ஏலம் போனது. மேலும் பருத்தியை நன்கு உலர்த்தி எடுத்து வந்து ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மேற்பார்வையாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி உட்கோட்டம் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.