Thiruvarur

News April 29, 2024

திருவாரூர் நீதித்துறையில் வேலைவாய்ப்பு

image

திருவாரூர் மாவட்ட நீதித்துறையில் 23 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த <> LINK <<>> க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

அரசு மருத்துவமனை பணியாளர் சஸ்பெண்ட்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனையில் தினம்தோறும் நூற்றுக்கணக்கான வெளிப்புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு போதிய மருத்துவர் செவிலியர் இல்லாத காரணத்தால் நேற்று நோயாளி ஒருவருக்கு துப்புரவு பணியாளர் டிரிப்ஸ் போட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பணியில் இருந்த தலைமை செவிலியர் மற்றும் செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News April 27, 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில். நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது ஆலோசனை கூட்டத்தில். நடைபெற்று மனிதன் நாடாளுமன்ற தேர்தல். காலங்களில் சிறப்பாக பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 27, 2024

அரசு பள்ளிகளில் 6417 பேர் சேர்க்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் வரும் கல்வி ஆண்டிற்காக ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை 3697 மாணவ மாணவிகளும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 2306 மாணவ மாணவிகளும் 9,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 414 மாணவ மாணவிகளும் என மொத்தம் 6417 பேர் புதிதாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை சேர்ந்துள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில்

image

திருவாரூர் பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 8:30 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு மாங்குடி, மாவூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியே காலை 10 .05 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடையும். அதேபோல் மறு மார்க்கமாக மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 6.55 மணிக்கு திருவாரூர் வந்தடையும்.

News April 27, 2024

திருவாரூர்: தெப்ப உற்சவவிழா

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது அதனை தொடர்ந்து இரவு அருகில் உள்ள குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மகிழம்பூ விநாயகர் சீதா ராமர் எழுந்தருளிய முதல் தெப்போற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

News April 26, 2024

காவல்துறை அதிகாரிகளுக்கான மாதாந்திர கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கு எஸ். பி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News April 26, 2024

ஆலங்குடியில் குருப் பெயர்ச்சி லட்சார்ச்சனை

image

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில் மே 1 ஆம் தேதி குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. லட்சார்ச்சனை இன்று முதல் 28 ஆம் தேதி வரையும் மேலும் மே 6 முதல் 12 ஆம் தேதி வரையும் நடைபெறும். கட்டணம் ரூ 400. மேலும் விவரங்களுக்கு 04366-269407 என்கிற ஆலய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

News April 26, 2024

திருவாரூர், வடுவூர் பறவைகள் சரணாலயம்!

image

திருவாரூர், வடூவூர் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை இவ்விடத்திற்கு 38க்கும் மேற்பட்ட, 20,000 வெளிநாட்டு பறவைகள் இடம்பெயர்வது வழக்கம். இங்கு வரும் பறவைகளின் உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. இங்குள்ள பல ஏரிகள் பல உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது.

News April 26, 2024

திருவாரூக்கு ரயில்கள் நீட்டிப்பு: வரவேற்பு

image

பயணிகளின் கோரிக்கைகு ஏற்ப மயிலாடுதுறை, திருச்சியிலிருந்து வரும் ரயில்கள் திருவாரூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை மே 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இயக்கப்படும் ரயில்கள், திருவாரூா் வரை நீட்டிக்கப்பட்டதற்கு, மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.