Thiruvarur

News May 2, 2024

பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்திய அமைச்சர்

image

மன்னார்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதுப்பாலத்தை அகற்றி அகலமான கான்கிரீட் பாலம் கட்ட தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பழைய குறுகிய கம்பி பாலம் உடைத்தெடுக்கும் பணி முடிவுற்றது. தற்போது புதிய அகலமான பாலம் கட்டும் பணி விவரங்களை தொழில் துறை அமைச்சர் ராஜா இன்று நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். நகரமன்ற தலைவர் சோழராஜன் நகரசெயலாளர் வீரா கணேசன் உடனிருந்தனர்.

News May 2, 2024

திருவாரூர்:மே தின கூட்டத்தில் பங்கேற்ற எம்பி,எம்எல் ஏ

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர் பகுதியில் 138 வது மே தின பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது இந்நிகழ்வில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம் செல்வராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி ஆகியோர் கலந்து கொண்டு மே தின பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர் இந்நிகழ்வில் அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

News May 1, 2024

மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

image

மன்னார்குடியில் கோபாலசமுத்திரம் வடக்கு வீதியில் வசிக்கும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் இரா. காமராஜ் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை வருகை தந்தார். காமராஜ் அவரை வரவேற்று உபசரித்தார். நிகழ்வில் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் மற்றும் கழக நிர்வாகிகள் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

News May 1, 2024

குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென ஆட்சியர் சாருஸ்ரீ இன்று தெரிவித்துள்ளார். முறையற்ற குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் குழாய்களில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் பொதுமக்களின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

News April 30, 2024

திருவாரூர்: ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோவில் திருவிழா

image

முத்துப்பேட்டை ஒன்றியம்  கற்பகநாதர்குளம் பகுதியில் உள்ளஸ்ரீ நல்லமாணிக்கர் 
சாமிகள்மிகவும் பிரசித்தி பெற்றது இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு நேர்த்திக்கடன்  செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இதில் இரண்டாயித்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

News April 30, 2024

திமுகவினரின் கோரிக்கையை கேட்ட அமைச்சர்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா மறவக்காடு ஊராட்சி சித்தேரி கிராமத்தில் உள்ள திமுக கிளை நிர்வாகிகளின் வீட்டிற்கு நேற்று தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா நேரில் சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் நிகழ்ச்சியில் மன்னார்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சித்தேரி சிவா உள்பட திமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News April 30, 2024

திருவாரூர்:  பொதுமக்கள் கடும் அவதி.

image

திருவாரூர் மாலட்டம் கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான பொதக்குடி சேகரை காந்திகாலனி மிளகுகுளம் பூதமங்கலம் தண்ணீர்குன்னம் லெட்சுமாங்குடி வடகோவனூர் உள்பட பல பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நேற்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் கோடை வெயிலில் வாடும் பொதுமக்கள் இந்த மின்வெட்டுக்கு ஓட்டு போட்டோம் என புலம்பி வருகின்றனர்.

News April 29, 2024

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்

image

தமிழகத்தின் முக்கிய சரணாலயங்களில் ஒன்றான உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், 1998 இல் உருவாக்கப்பட்டது. முத்துப்பேட்டை அருகே 45 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது இச்சரணாலயம். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படும் ஊதா கானான் கோழி மற்றும் நத்தை குத்தி நாரைகள் முதலியன இச்சரணாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

News April 29, 2024

புதிய தேவாலயத்தை திறந்து வைத்த அமைச்சர்

image

மன்னார்குடி ஒன்றியம் ராமபுரம் ஊராட்சி வாஞ்சூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News April 29, 2024

மன்னார்குடி ரயிலுக்கு புதிய எல் ஹெச் பி வகை பெட்டிகள் அறிமுகம்

image

மன்னார்குடியில் இருந்து ஜோத்பூர் வரை செல்லும் பகல் கீ கோத்தி விரைவு ரயில் வண்டிகள் இன்று முதல் எல் ஹெச் பி பெட்டிகள் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. வழக்கமான கன்வென்ஷனல் கோச் – க்கு பதிலாக எல் ஹெச் பி கோச் -கள் மிகவும் பாதுகாப்பானவை. அதிக வேகத்தில் செல்லும். அதிக எடை சுமக்கும் ஆக சிறந்த பயண அனுபவத்தை தரதக்கவையாகும் எனவே, இன்று மாலைகள் அணிவித்து சிறப்பாக வழியனுப்பி வைக்கப்பட்டது