India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத கூடுதல் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்திடும் நேர்காணல் தேர்வு முகாம் நடைபெற்றது. இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டத்துக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் திருவாரூர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பல்நோக்கு விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாரு ஸ்ரீ அவர்கள் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 8-ஆவது சர்வதேச திரைப்படவிழா திருவாரூரில் 5-நாட்கள் நடைபெறுகிறது. இதில் 13- நாடுகள், 22- திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதற்கு நுழைவுகட்டணம் ரூ.1000/-மட்டும். செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22 வரை தைலம்மை மல்டி ப்ளக்ஸ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள், அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2023-2024 ஆண்டிற்கான தமிழ்நாடு காவலர் சிறப்பு கல்வி உதவித்தொகை ரூ.1,95,756/- க்கான காசோலையை 7 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் வழங்கி, வாழ்த்து கூறினார்.
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொறியியல் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக திருவாரூர் வழியாக செல்லும் தஞ்சாவூர்-மயிலாடுதுறை ரயில் செப்.10,12,14,17,19 ஆகிய தேதிகளிலும், திருவாரூர்-மயிலாடுதுறை ரயில் செப்.11,12,13,14,15 தேதிகளிலும், மன்னார்குடி-மயிலாடுதுறை ரயில் செப்.11,12,13,14,15 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் இன்று (செப்.10) மட்டன் தனிக்கறி ஒரு கிலோ ரூ.750 முதல் ரூ.900 வரையும், எழும்பு கறி ரூ.500 முதல் 700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முத்துப்பேட்டையில் மட்டன் தனி கறி ரூ.800 முதல் 1000 வரை விற்கப்படுகிறது. எறும்பு கறி ரூ.500 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திருத்துறைப்பூண்டியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது: மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க முடியாது. மும்மொழி திட்டத்தை ஏற்றால் தான், தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என்றும், இல்லையென்றால் நிதி வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு மறுக்கிறது. மூடநம்பிக்கை பழக்கவழக்கங்களை கல்வி நிலையங்களில் சொற்பொழிவு என்ற பெயரில் நடத்த கூடாது என்றார் அவர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று 9/9/24 ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. தாட்கோ மூலமாக சூரனூர் ஓடாச்சேரியில் ரூபாய் 86 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தின் சாவியை மகளிர் உதவி குழுக்களிடம் ஆட்சியர் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்க நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் கலந்து கொண்டு பட்டா மாற்றம், மின் இணைப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் உடன் இருந்தார்.
மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் முன்புறம் அமைந்துள்ள கூடைப்பந்து மைதானத்தில் இன்று 9/9/24 காலை முதல் திருவாரூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான 14 மற்றும் 17 வயதிற்குட்பட்டோர்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டியில் முதலிடம் பெறும் அணியினர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
Sorry, no posts matched your criteria.