India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்னார்குடி நகரின் பல்வேறு இடங்களில், விநாயகர் சதுர்த்தியை ஓட்டி விநாயகர் சிலைகளை வைப்பதற்கு பக்தர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பழைய தஞ்சை சாலை பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நாளை இந்த விநாயகர் சிலையின் கண்கள் திறக்கும் நிகழ்ச்சி நடத்தி அதன் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வேலூர் ஊராட்சி நியாய விலை கடையினை செப்டம்பர் 5 இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி தி. சாருஸ்ரீ அவர்கள் நேரில் சென்று நியாய விலை கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை இருப்பு உள்ளதா, அளவு சரியாக உள்ளதா என சோதனை செய்து ஆய்வு மேற்கொண்டார். அலுவலக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பருவத்திற்குப் 9184 மெ.டன் யூரியாவும், 2067 மெ.டன் டி.ஏ.பியும், 1024 மெ.டன் பொட்டாஷ், 1758 மெ.டன் காம்ப்ளக்ஸ், 354 மெ.டன் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்டும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகவலை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திருமங்கலம் சுடுகாடு அருகே நேற்று முன்தினம் 25 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் மேலபுள்ளான் விடுதியை சேர்ந்த கணேசன் என்றும், காதலிக்கு வேறொருடன் திருமண நடக்க இருந்ததால், ‘நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று வீடியோ வெளியிட்டு உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு திருவாரூர் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று 5/9/24 காலை 11 மணியளவில் திருவாரூர் கோட்டாட்சியர் (ஆர் டி ஒ) அலுவலகத்தில் நடைபெறும். மாற்று திறனாளிகள் தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தஞ்சாவூர் திருவாரூர் நாகை மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து சணல் தார் பாய் உள்ளிட்ட தேவையான தளவாட சாமான்கள் உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசு நடப்பாண்டில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி கே வாசன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை வங்கி இணைந்து எதிர்வரும் 06.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் அம்மையப்பன் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி கடனுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. கல்வி கடன் முகாமில் அனைத்து வங்கி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 8 ஆசிரியர்கள் மாநில அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர் தேவி (மன்னார்குடி), கோமதி(ஆலங்கோட்டை), தங்கபாபு(கோட்டூர்), சிவகுமார் (நன்னிலம்), வேணுகோபால் (சேரன்குளம்), ராஜலட்சுமி (திருவாரூர்), மணிகண்டன் (செல்லூர்), முருகையன் (புத்தகரம்) ஆகியோர் நாளை சென்னையில் விருதினை பெற உள்ளனர்.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பசுமை பள்ளி என்கிற பெயரில் 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள் தேர்வாகி உள்ளன. புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சூரனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் ரூ 20 லட்சம் பெறுகின்றன.
Sorry, no posts matched your criteria.